இக்னோவின் பி.எட்., நுழைவுத் தேர்வு



டில்லியில் உள்ள இக்னோ பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில், 2014ம் ஆண்டு பி.எட்., படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், இயற்பியல், விலங்கியல் உள்ளிட்ட பல பிரிவுகள், இதில் இடம்பெற்றுள்ளன.
தகுதிகள்:  இளநிலை பட்டப் படிப்பை, 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், நிரந்தரம் அல்லது தற்காலிகமாக 2 ஆண்டு முழு நேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள், இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நேரடியாக கல்லூரியில் முழுநேர பி.எட்., படிப்புக்கு கால அளவு 1 வருடம். தொலைநிலைக் கல்வியில் இது 2 ஆண்டு படிப்பாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை, இக்னோ பல்கலையின் கல்வி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாய்.
நுழைவுத் தேர்வு 2013 ஆக., 18ம் தேதி நடக்கிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி: 2013 ஜூலை 15.
மேலும் விபரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment