அனுமதி பெறாமல் இயங்கும் 14 மழலையர், தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவு.

அரியலூர் மாவட்டத்தில் தொடக்க கல்வித் துறையில் அனுமதி பெறாமல் இயங்கும் 14 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

அரியலூர் மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறையில் அனுமதி பெறாமல் செயல்படும், ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை அம்மா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, உடையார்பாளையம் வட்டம் ஜயங்கொண்டம் ஆர்.சி.பாத்திமா மழலையர் பள்ளி, உட்கோட்டை யுத்தபள்ளம் நேரு மழலையர் தொடக்கப்பள்ளி, உடையார்பாளையம காமராசர் அறக்கட்டளை மழலையர் தொடக்கப்பள்ளி, தா.பழூர் மதிநிலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அரங்கராயநல்லூர் அருகே உள்ள சிலால் மதுரா மழலையர் தொடக்கப்பள்ளி, இருகையூர் மகாகவி பாரதி ஷேசாலயா மழலையர் தொடக்கப்பள்ளி, தவுத்தாய்குளம் திருச்சி பிரதான சாலையில் உள்ள விஜயதாரணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, இரும்புலிக்குறிச்சி குறிஞ்சி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, செந்துறை தாகூர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வாரணவாசி அன்னை இந்திரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, காமரசவல்லி பாரதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வெற்றியூர் முத்துலெட்சுமி மழலையர் தொடக்கப்பள்ளி, காமரசவல்லி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 14 பள்ளிகள், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய முன் அனுமதி பெறாமல், ஒப்புதலின்றி செயல்பட்ட காரணத்தால் ஏற்கனவே இரண்டு முறை காரணங்காட்டும் அறிவிப்பு வெளியிட்டும், 31.5.2013-க்குள் உரிய ஆணை பெறாத நிலையில் மேற்கண்ட பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை உடனடியாக அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க தொடக்கக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர். 

No comments:

Post a Comment