படிக்கட்டு பயணத்தைத் தடுக்கும் கருவி: பள்ளி மாணவர் கண்டுபிடிப்புக்குப் பரிசு.
தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 3 பிளஸ் டூ மாணவர்கள், படிக்கட்டில் பயணம் செய்வதைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளனர்.
மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. அக்னி பொறியியல் கல்லூரி பெüதிகத்துறை பேராசிரியர் ஷர்மிஸ்தா அறிவியல் கண்காட்சியைத் துவக்கி வைத்து, மாணவர்களின் கண்டுபிடிப்பு மாதிரிகளைப் பார்வையிட்டார். பிளஸ் டூ மாணவர்கள் ஆர்.சஜீன்வினோத், என்.சாய்சங்கர், ஆர்.ராகவன் ஆகியோர் இணைந்து ரூ.8 ஆயிரம் செலவில் உருவாக்கி இருந்த பஸ் படிக்கட்டு பயணத்தைத் தடுக்கும் கருவியை சிறந்த கண்டுபிடிப்பு மாதிரியாகத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கினார். பின்னர் அவர் மாணவர்களைப் பாராட்டிப் பேசும்போது,
சென்னை போன்ற மாநகரங்களில் அதிக நெரிசல் காரணமாக பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதைத் தடுக்கும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் உருவாக்கி உள்ளனர். இந்த கண்டுபிடிப்பு சாதனம் பொருத்தப்பட்ட பேருந்தில் யாராவது படிக்கட்டில் நின்று பயணித்தால் பஸ் தானாக நின்று விடும் வகையில் வடிவமைத்துள்ளனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment