6 - ஆவது ஊதியக்குழு ஊதிய விகிதம் வந்ததால்
01.06.2009 - க்கு பின்னர் பணியேற்றவர்களுக்கு
ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை பாரீர்.
01.01.2012 - இன் படி இதனை ஆசிரியர் அரங்கம் விளக்க
விரும்புகிறது.
01.01.2012 இ.நி.ஆசிரியர் அ. ஊதியம் 5200+2800 +750=8750
01.01.2012 - இன் படி D.A. 65% =5688
TOTAL =14438
6 - வது ஊதியகுழு ஊதிய விகிதம் வராமலிருந்தால்
01.01.2012 - இல் இடைநிலை ஆசிரியர் ஊதியம்
(முந்தைய ஊதிய விகிதத்தில் ) 4500 + D.P.2250 = 6750
01.01.2012 - இல் முந்தைய ஊதிய விகித D.A.139% = 9383
(G.O.No. 145.date.30.04.2012)
TOTAL = 16133
16133 - 14438 = 1695 இழப்பு.
இதற்கு ஒரே தீர்வு மத்தியஅரசுக்கு இணையான ஊதியத்தை
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதேயாகும்.
ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டதன் நோக்கம் குறைகளை
தீர்ப்பதற்காகவே. அவர்களிடம் இதுபோன்ற குறைகளை சுட்டி
காட்டுவதற்கு மாறாக கோரிக்கை வைத்துக்கொண்டுள்ளார்கள் நம்
பெரும்பான்மை சங்கங்கள். கோரிக்கை வைக்கும் காலம் கடந்து
தற்போது ஊதியத்தில் உள்ள குறைகளை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ள
காலத்தில் குறைகளை விளக்கி கூறாமல் கோரிக்கை வைத்து கொண்டிருந்தால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே.
எந்த சங்கம் இது போன்று தெளிவாக பாதிப்புகளை சுட்டி காட்டி
குறைதீர்ர்க்கும் பிரிவிடம் விளக்கி உள்ளது என்பது மனசாட்சி உள்ள
இடைநிலை ஆசிரியர்களுக்கு தெரியும்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் எவ்வாறு பாதிப்புகளை
ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் விளக்கியுள்ளது என்பதற்கு
சான்றாக இதனை குறிப்பிட்டுள்ளோம்.
ஒவ்வொரு நிலையிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வகையான
பாதிப்புகள் என்பதை T.A.T.A விளக்கியுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உறுதியாக
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை நீக்குவார்கள்
என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.