அலுவலர்களுக்கு "மெமோ' : கலெக்டர் எச்சரிக்கை

திருப்பூர் : முதல்வர் தனிப்பிரிவில் இருந்து வந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அலுவலர்களுக்கு, "17ஏ' பிரிவில் விளக்கம் கேட்டு, "மெமோ' அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.


பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மனுக்கள் பெற்றபின், துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. துறை வாரியாக நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து நடவடிக்கைக்கு அனுப்பிய மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பல அலுவலகங்களில் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வந்த மனுக்கள் மீது மூன்று மாதத்துக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

கலெக்டர் மதிவாணன் பேசியதாவது:
முதல்வரின் தனிப்பிரிவில் இருந்த வந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பதில் மற்றும் விளக் கங்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர் மூலம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
கடிதம் வந்த 15 நாட்களுக்குள் நடவடிக்கையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், ஏராளமான துறைகள் மெத்தனமாக உள்ளன. குறைகேட்பு நிகழ்ச்சிக்கு வரும் அலுவலர்கள், தங்கள் அலுவலகத்தில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்த முழு விவரங்களையும் கொண்டு வர வேண்டும்.
அக்கறை காட்டாத அலுவலர்கள் மீது "சஸ்பெண்ட்' நடவடிக்கை கூட எடுக்கப்படலாம். மனுக்களை நிலுவையில் வைத்துள்ள அலுவலகங்களில் சிறப்பு தணிக்கை நடத்தப்படும். பல்வேறு துறைகளில் ஆள் பற்றாக்குறை உள்ளது. இருப்பினும், அதை சமாளித்து, பணிகளை செய்ய வேண்டும்.
வரும் 13க்குள் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த நடவடிக்கைகளை முடித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், முதல்வர் மற்றும் துறை தலைமைக்கு, சம்பந்தப்பட்ட அலுவலரின் பெயருடன் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்படும். நடவடிக்கை எடுக்காத அலுவலர்களுக்கு "17ஏ' பிரிவின் கீழ் "மெமோ' வழங்கப்படும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

டி.ஆர்.ஓ., கஜலட்சுமி பேசுகையில், ""மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதே இந்த அளவில் உள்ளது என்றால், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும்; அதன் தன்மை எந்தளவு இருக்கும் என்று கூற முடியவில்லை. குறைகேட்புக்கு வருவதை ஏதோ விசேஷ நிகழ்ச்சிக்கு வருவதுபோல் எண்ணி, அலுவலர்கள் வரக்கூடாது,'' என்று எச்சரித்தார்.

No comments:

Post a Comment