டிட்டோ ஜாக்கில் இணைந்திராத சங்கங்களெல்லாம் இடைநிலை ஆசிரியர்களின் நலனில் அக்கறை இல்லாதவர்களா?

   ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படித்தேன். அதில் வரிசை எண்.11 இல் "டிட்டோ ஜாக்கில் இணைந்துள்ள இயக்கங்கள்  தவிர வேறு  இயக்கங்களையோ, அமைப்புகளையோ அரசியல்கட்சி தலைவர்களையோ வாழ்த்துரை மற்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்". என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 டிட்டோ ஜாக்கில் இணைந்திராத சங்கங்களை தவிர்ப்பதில் மிகவும் கவனமுடன் இருக்கிறார்கள். நல்லதுதான்.

பணியாளர் சங்கம் பணியாளர்களுக்கே - பணி ஒய்வு பெற்றவர்களுக்கு அல்ல என்று T.A.T.A. சங்கம் வலியுறித்தி கூறி வருகிறது.   (தாத்தா சங்கங்கள் என்று விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.)அப்படி சொல்லும் போது  பலருக்கு கோபம் வருகிறது. எங்கள் சங்கத்தில் அப்படி இல்லை என்றுவேறு சொல்லுகிறார்கள். ஆனால்  அப்படி கூறுபவர்கள் கூட்டு சேர்ந்திருப்பது பணி  ஓய்வு பெற்றவர்களை முன்வைத்து சங்கங்கள் நடத்துபவர்களுடன்.

  ஆனால் இன்று இவர்களின் வழிகாட்டு நெறிமுறைகள் மிகவும் கண்டிப்புடையதாக உள்ளது.

  வெற்றி  இலக்கு உறுதி உடையதாக இருக்க வேண்டுமானால் பணியாளர் சங்கங்கள் பணியாளர்களை மட்டுமே உடையதாக இருக்க வேண்டும்.




   

No comments:

Post a Comment