2,600 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை: கல்வித்துறை எச்சரிக்கை

28-09-2012

சென்னை: பள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லாததால், இவற்றில் பயிலும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
CCE - CO SCHOLASTIC DRAFT FOR UPPER PRIMARY & PRIMARY




தொடக்கக் கல்வி - கன்னியாகுமரி மண்டலம் - பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் 05.10.2012 அன்று நடைபெறுவது குறித்த இயக்குநர் செயல்முறைகள்

 ந.க.எண். 020081 / ஜெ3 / 2012.


தொடக்கக் கல்வி - சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்துதல் - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் விவரங்கள் 01.06.2012 அன்றைய நிலவரப்படி அனுப்ப உத்தரவு.



அனைவருக்கும் கல்வி இயக்கம் - பயிற்சி கூடத்தில் வைக்கும் பேனர் SCERT மற்றும் SSA இணைந்து நடத்தும் பயிற்சி என குறிப்பிட வேண்டும் இயக்குனர் உத்தரவு.

காலாண்டுத் தேர்வு கேள்வித்தாள்: தனியார் நோட்சில் முன்பே "ரிலீஸ்'


சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வின் கேள்வித்தாள், "சுரா' எனும், தனியாரின் நோட்சில் அச்சு பிசகாமல் இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்.

மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வும் அக்டோபர் 14ம் தேதி நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு  திருச்சி மண்டல அளவில் மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEO's கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம்
நடைபெறும் இடம் மற்றும் நாள் மாற்றம் குறித்த இயக்குனரின் செயல்முறைகள். ( 29.9.2012 க்குப் பதிலாக 06.10.2012)

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING
    

குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர், மருத்துவர் உட்பட வட்டார அளவில் 15 பேர் குழு அமைத்து கண்காணிக்க அரசு உத்தரவு.



2012 - 2013ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை CCE - மாலையில் பாடவேளைகள் நிறைவுபெறும் போதுதான் நாட்டுபண் பாடுதல் உட்பட பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்வது குறித்த ஆணை.


சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை.

பரிசு வழங்குவதாக எஸ்.எம்.எஸ்.,
அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்.


ஆத்தூர்: பரிசு விழுந்துள்ளதாக, மொபைல் ஃபோன்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பணம் பறிக்கும் கும்பலிடம், மொபைல் ஃபோன் உபயோகிப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீஸார், எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றனர்.மொபைல் ஃபோன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, பரிசு மற்றும் விருது வழங்குவதாக, எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர்.
RIGHT TO EDUCATION (RTE)
சார்ந்த தெளிவுரைகள்.

1.   இலவச மற்றும் கட்டாய  கல்வி உரிமைச்சட்டம், 2009.   
       ( மத்திய அரசு வெளியீடு.)
                              Click Here to Download    

2.    RTE Model Rules Under Right to Education Act 2009.
                              Click Here to Download

3.    Right to Education Act, Tamil Version. ( தமிழகத்தில்
        இச்சட்ட வரைவு விதிகள் நிறைவு செய்வதற்கு முன்னர்
        கருத்து கேட்புக்காக வெளியிடப்பட்ட தொகுப்பு)
                              Click Here to Download      

4.    Right to Education 2009, Clarification on Provisions.
                              Click Here to Download

5.   Guidelines regarding deployment of teachers for Elections.
                              Click Here to Download

6.   Central Government authorises NCTE as Academic authority.
                             Click Here to Download 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


புதுடில்லி: சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

23-09-2012

விருதுநகர்: பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

கல்விக் கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை.

23-09-2012

சிவகங்கை: மாணவர்கள் கல்விக் கடனுக்காக, பிற வங்கிகளில் தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய பள்ளி.


இப்பள்ளியில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 2010-11-ம் ஆண்டின் கல்வியாண்டு வரை தோரயமாக 39,437 மாணவர்கள் படித்துவருவதாகவும், இந்த கல்வியாண்டி இது 45 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கையை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மண்டலத்தில் (9 மாவட்டங்களுக்கு) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசுமுதன்மை செயலாளர் முன்னிலையில் மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் 29.09.2012 அனைத்து கல்வித்துறை அலுவலர்களுடன் நடைபெறுகிறது.


அரசின் கட்டண நிர்ணயம், சி.பி.எஸ்.சி., பள்ளிக்கும் பொருந்தும்.

22-09-2012.

சென்னை: "தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாததால் நடவடிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 2448 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதற்கு 37 பேர் வரவில்லை. எஞ்சிய 2411 பேரில் 202 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சிகளை முடிக்கவில்லை. மேலும் பலர் 2 பட்டங்களை பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வு : புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சென்னை, செப். 21 : தமிழகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வில் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தேர்வெழுத அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு இப்போதைக்கு இல்லை.


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம், திடீரென அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவே, இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

20.09.2012 பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். பள்ளிகல்வி  துறை அறிவிப்பு.
 பள்ளிகல்வி - செப்டம்பர் 20 நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க பள்ளிகல்வி இயக்குனர், தொடக்ககல்வி இயக்குனர் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனர் அவர்களுக்கு அனுமதி அளித்து பள்ளிகல்வித்துறை  செயலாளர் அவர்கள்    உத்தரவு.

10,12ஆம் வகுப்பு தற்போதுள்ள கால அட்டவணையின்படி இறுதித்
தேர்விற்கு மறுநாள் தேர்வினை நடத்திடவும், மற்ற வகுப்புகளுக்கு
அந்தந்த மாவட்ட CEO அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதற்கான 
கடிதம். Govt Lr.32194/E1/2012 date 17.9.2012.

CLICK HERE TO DOWNLOAD THE GOVT LR.


ஆன்லைன் மூலம் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் தமிழக கல்வித்துறை வரலாற்றில் புதிய மைல் கல்.
தூத்துக்குடியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் சென்னை பள்ளிக்கல்வித்துறை மூலம் நேற்று (15.09.2012)ஆன்லைனில் நடந்தது. இதில் இடங்களை தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ ராமச்சந்திரன் ஆர்டரை வழங்கினார். 

தரமான கல்வி வேண்டும்: சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்


புதுடில்லி: என்ன விலை கொடுத்தாவது குழந்தைகளுக்கு தரமான கல்வியை , தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் கட்டாயம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. புதிய அறிவு தேடலும், ஒழுக்கமும் உள்ளது தரமான சிறந்த கல்வியில் தான் எனவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எப். எம். இப்ராஹிம் ஆகியோர் வெளியிட்டிருப்பதாவது: தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போன்று தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை நியமிப்பதில் அரசு முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் அரசு என்ன விலை கொடுத்தாவது தரமான கல்வியை அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி திறனறிதல் தேர்வு.


 தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில், தற்போது அரசுப் பள்ளிகளைப் போல், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும்.
தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில், ஆசிரியர்கள் நடத்திய பாடத்தில் இருந்து, மிகவும் அடிப்படையான கேள்விகள் இருக்கும். இம்மாதம் 21ம் தேதி தேர்வு நடக்கிறது. இதனடிப்படையில், கற்பித்தில் திறனை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Departmental Test- Books To Download ...


List of Books
Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005  (Annexure I)
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 97-218)
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150151-270271-340 )
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150,151-220221-296297-380381-423 )
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300301-357 )
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88 89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86 87-175)
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188,189-288289-388389-511)
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190191-290291-400401-520521-641 )
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340341-490491-600 )
கூட்டுறவு சங்க தேர்தல் பிப்ரவரிக்குள் முடிக்க உத்தரவு

 தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தலை, பிப்ரவரிக்குள் நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க தலைவர், இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக அனைத்து வங்கிகளிலும் மகாசபை கூட்டங்களை நடத்தி, உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் நடத்தப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, புதிய உறுப்பினர்களாக சேரவும், பழைய உறுப்பினர்களின் சந்தா தொகை ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இத்தொகை ரூபாய் நூறாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தலை வரும் பிப்ரவரிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு, மண்டல இணைபதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
2012 - 2013 AEEO SENIORITY PANEL LIST RELEASED BY DEE CHENNAI. 

ஏதேனும் முறையீடுகள் இருப்பின் 21.9.2012 - க்குள்  மாவட்ட 
தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் மூலம் இயக்குனர்
அவர்களுக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD THE PANEL LIST

ஊதிய நிர்ணயம் - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றவருக்கு பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்த மண்டலக் கணக்கு தணிக்கை அலுவலரின் தெளிவுரை. ந.க.எண். 760 / அ4 / 2012, நாள். 02.05.2012.

 CLICK HERE TO DOWNLOAD

திருச்சி - தா.பேட்டையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டம்

செப். 12-
தா.பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் அரசு அறிவித்த ஊதியம் நிர்ணயம் செய்த ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்கும்படி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் இதுகுறித்து திருச்சியில் நடைபெற்ற குறைதீர் நாளில் கலெக்டரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். கலெக்டர் ஜெயஸ்ரீ விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தா.பேட்டை கிளையின் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்ஹிந்த், வட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ராமன், வட்ட செயலாளர் தியாகராஜன், மாவட்ட செயலர் ஆறுமுகம் மற்றும் பலர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு சென்று ஓய்வூதியர்களின் பணப்பயன் பற்றி பணியில் இருந்த கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் கேட்டு உள்ளனர். அதற்கு அவர் உரிய பதில் கூறாமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை அலட்சியப்படுத்தி பேசியுள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பணப் பயன்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடம் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் அலுவலகத்தின் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாலதி உடனடியாக அலுவகத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.



எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் 
ஆன் லைனில்விண்ணப்பிக்கும் வசதி: 
அரசு தேர்வுத்துறை அறிமுகம்.


செப். 11- எஸ்.எஸ்.எல்.சி, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை அறிந்து ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை அரசுத் தேர்வுத்துறை அறிமுகம் செய்துள்ளது.
 
அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான அறிவுரைகளை www.dge.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
 
ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தலைவருக்கு கோர்ட் உத்தரவு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். 2,488 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் யாமினி என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வினை மீ்ண்டும் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வு வாரிய தலைவர் இன்று பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு


உயிர்காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலை வாய்ப்பு முகாம், சென்னை அடுத்த, திருவள்ளூரில் நடக்கிறது. தமிழகத்தில் உயிர்காக்கும் அவரச சேவைக்கான, 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும், 12ம் தேதி திருவள்ளூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள, 108 மையத்தில் நடக்கிறது.

மாதம் 20 பள்ளிகளை ஆய்வு செய்தால் கல்வித்தரம் உயரும்

 மாதந்தோறும் 20 பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் என்று கல்வி அலுவலர்களுக்கு முதன்மை செயலர் சபீதா அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிகளில் நாளிதழ்கள் வாங்குவதற்கான பணம் "ஸ்வாகா'


கம்பம்: பள்ளிகளில், மாணவர்களின் பொது அறிவை வளர்க்கவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும், நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வாங்க, வழங்கும் 10 ஆயிரம் ரூபாயை, பெரும்பாலான பள்ளிகள், "ஸ்வாகா' செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Results of Departmental Examinations - MAY 2012
(Updated on 06 September 2012)
Enter Your Register Number :                                              

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா 13-ந்தேதி வருகை

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மாண்புமிகு 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா
13-ந்தேதி வருகை

திருச்சிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 13-ந்தேதி வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 3-ந் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நாள்தோறும் அன்னதானம், வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத் திட்ட உதவிகள் வழங்கியும் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மேற்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதிகள் சந்திக்கும் இடத்தில் மேடை பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் பிறகு தேதி குறிப்பிடாமல் விழா ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி வியாழக்கிழமை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி:
 பள்ளிக் கல்விச் செயலர் டி.சபீதா தகவல்


தொடக்கக் கல்வித் துறையின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் டி.சபீதா தலைமையில் நடைபெற்றது

ஏற்றம் தரும் எழுத்தறிவு: இன்று உலக எழுத்தறிவு தினம்-08-09-2012



செப்.15 முதல் முப்பருவ கல்வி திட்டப் புத்தகங்கள் வினியோகம்

 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 9.50 கோடி பாடப் புத்தகங்கள், 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

அட்டகாசமாக தயாராகுது அரசு பள்ளிகளுக்கான அட்லஸ்.

 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, அக்டோபர் மாத இறுதியில், தகவல் குவியல்களுடன் கூடிய, 90 பக்கங்கள் கொண்ட இலவச, அட்லஸ் வினியோகிக்கப்பட உள்ளது.

பார்வை பறிபோன மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

08-09-2012

 வகுப்பறையில் சக மாணவன் பிரம்பை வீசியதால், மற்றொரு மாணவனின் கண்ணில் பட்டு, பார்வை பறிபோன வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டை, பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: மறுதேர்வு எழுதுவோருக்கு திங்கள்முதல்
 ஹால் டிக்கெட்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாணை வெளியீடு: மறுதேர்வு நடைபெறும் அக்டோபர் 3-ம் தேதி புதன்கிழமை ஆகும். அனைத்து ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதும் வகையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடக்கக் கல்வி - 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிகாலத்தையும் 1.6.1988க்கு பிந்தைய பணிகாலத்தையும் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதிக்க அரசு விவரம் கோரி உத்தரவு.

செயல்முறைகள் ந.க.எண். 13368 / டி4 / 2011, நாள்.    08.2012 பதிவிறக்கம் செய்ய..


கல்வி கட்டணம் செலுத்தாமல் மாணவர்களை சேர்க்கக்கோரி மனு-05-09-2012



சென்னை: கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தாமல், தொழிற் கல்லூரிகளில் முதல் தலைமுறை மாணவர்களை சேர்க்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, "வெளிச்சம்" என்கிற அமைப்பின் தலைவர் செரின் ஆஷா என்பவர் தாக்கல் செய்த மனு: ஒரு குடும்பத்தில் பட்டதாரி, டிப்ளமா முடித்தவர்கள் யாரும் இல்லையென்றால், அந்த குடும்பத்தில் இருந்து, முதன் முதலாக தொழிற் கல்லூரியில் சேரும் மாணவருக்கான கல்விக் கட்டணத்தை, அரசு செலுத்தும் என, 2010ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெறாத 6 1/2 லட்சம் பேருக்கு அடுத்தவாரம் முதல் ஹால் டிக்கெட் வினியோகம்.


அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர்  
அரங்கத்தின் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.


டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - வாழ்த்து கடிதத்துடன் அழைப்பிதழ்.

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜனின், வாழ்த்து கடிதத்துடன், தனித்தனியே அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வு -

 தமிழக அரசு பள்ளிகளில் வேலை கிடையாது.

சென்னை: "சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு : அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

புது தில்லி, செப்., 04 : அரசுப் பணிகளில் பதவி உயர்வின்போதும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
"துறை ரீதியான விசாரணை அடிப்படையில்
ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது'


"லஞ்ச புகாருக்கு ஆளான அரசு ஊழியரை, துறை ரீதியான விசாரணை, "குற்றமற்றவர்' என, கூறினாலும், அதனடிப்படையில், அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
  புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி
 ஆசிரியர்களுக்கு 200 வேலை நாட்களாக
 அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை 

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கை:
ஏ.டி.எம்.,மில் பணம் ரிசர்வ் வங்கி புது உத்தரவு


புதுடில்லி:ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளை, கையில் எடுக்கத் தவறினால், அப்பணத்தை மீண்டும், இயந்திரம் உள்ளிழுத்துக் கொள்ளும் வசதியை, ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி-02-09-2012

புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 21 கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலை: பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் 2012-13ம் கல்வியாண்டில் பி.எட்., படிப்பில் சேர, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 செப்டம்பர் 17 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.,30ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் விரிவான தகவல்களை அறிய http://www.bdu.ac.in/admission/cde2012/CDE_Advt_BEd_2012.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.