சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த முடிவு: சட்டசபையில் மசோதா தாக்கல்.



ஏப். 15-

 
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து கடந்த ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரம்பின்றி மூடப்பட்டது.
 
ஆட்குறைப்பு நடவடிக்கை இல்லை என்று பல்கலைக்கழகம் கூறியது. அத்துடன் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை குறித்து ஆராய்வதற்காக குழு அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருப்பினும் நிர்வாக குளறுபடி மற்றும் முறைகேடுகள் இருப்பதால் பல்கலைக்கழகதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன.
 
இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இதனால் பல்கலைகக்கத்திற்கு அரசு அளிக்கும் சிறப்பு அதிகாரங்கள் இனி வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது.

No comments:

Post a Comment