நடப்பு கல்வியாண்டில் புதிதாக 12 கல்லூரிகள்: முதல்வர்.

சென்னை: "நடப்பு கல்வியாண்டில், புதிதாக, 12 கல்லூரிகள் துவக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில், ஒரு அரசு பொறியியல் கல்லூரி மற்றும், 22 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டன. மீதமுள்ள, இரு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 10 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் விரைவில் செயல்படும்.
வரும், 2013-14ம் கல்வி ஆண்டிலிருந்து, மேலும் எட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படும். இது தவிர, நடப்பு கல்வியாண்டில், மேலும் நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும்.
இதுதவிர, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரிலும்; கடலூர் மாவட்டம், திட்டக்குடியிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக, இரண்டு கல்லூரிகள், இந்த ஆண்டு முதல் செயல்படும். திருச்சி, ஸ்ரீரங்கத்தில் ஒரு அரசு பொறியியல் கல்லூரியும்; திருவண்ணாமலை, செய்யாரில் ஒரு அரசு பல வகை தொழில்நுட்ப கல்லூரியும், இந்த ஆண்டு முதல் துவக்கப்படும்.
இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment