எமது தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர், தலைவர், பொருளாளர் உள்ளிட்ட   ஆசிரியர்கள் திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று முதல் வெளியிருப்புப் போராட்டம். போராட்டம் இன்றும் தொடர்கிறது.

                               ஊழல்கள் குறித்து தகவல்   கோரியது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் அவர்களின் மனைவி, தலைமை ஆசிரியர் பணியிலிருந்து நிரந்தர பணி நீக்கம் செயப்பட்டார்கள். அதனை ரத்து செய்ய கோரியும் மேலும் பணி மாறுதல்களில் ஏற்பட்ட முறைகேடுகளை நீக்க வலியுறுத்தியும் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது. 

நேற்று நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை அதிகாரிகளுடன் நடைபெற்றுள்ளது. 

முழுமையான தீர்வு ஏற்படாததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது. நல்ல தீர்வு ஏற்படும்  என்ற நம்பிக்கையில் போராடும் பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர். 

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 



No comments:

Post a Comment