மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை

திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள்
குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர்.
மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் 
போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள்
முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.


கழிப்பறைகளில் தண்ணீர் குழாய் வசதி இல்லையெனில்
வாளிகளில் தண்ணீர் நிரப்பி இருக்க வேண்டும்.
பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.
மாணவ, மாணவிகள் கழிப்பறைகளை பயன் படுத்த வேண்டும். 
கழிப்பறைகள் பழுது நிலையில் இருந்தாலோ அல்லது
பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ, குடிநீர் 
வசதி இல்லாமல் இருந்தாலோ அப்பள்ளி தலைமை 
ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
 என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment