இடைநிலை ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்
         தற்போது அமைக்கப்பட்டுள்ள ஊதிய குறை தீர்க்கும் பிரிவு குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அரசாணை 71 இல் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறும் நண்பர்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறோம். அரசாணை 71 இன் வரிகளை பாருங்கள். பத்தி 6  மேலே கூறப்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஆணைகளினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து சீரமைக்கும் வகையில் அரசு விரிவாக ஆராய்ந்து இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஊதிய விகித மாற்றங்களை செய்து அரசு ஆணையிடுகிறது. 

       அதாவது இணைப்பில் உள்ள பணியிடங்களில் வருவாய்துறை நீங்கலாக மற்ற துறை பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்து அரசாணை 71 வெளியிடப்படுகிறது.  மீண்டும் பத்தி 8  பாருங்கள். மேலே பத்தி 6  இல் மேற்கொள்ளப்பட்ட ஊதிய திருத்தங்களை தொடர்ந்து, பாதிப்பு ஏற்படும் அலுவலர்கள் அரசிடம் மேல் முறையீடு செய்ய  வாய்ப்பளிக்கப்படுகிறது.  எனவே இம்முறையீடுகள் ( அதாவது அரசாணை 71 இன் படி ஊதிய குறைப்பு செய்யப்பட்டவர்களின் முறையீடுகள்) மற்றும் ஏனைய ஊதிய மாற்றத்திற்க்கான முறையீடுகளை பரிசீலித்து  ( அதாவது அரசாணை 71 இல் குறிப்பிடப்படாத துறையினரின் ஏனைய ஊதிய மாற்றத்திற்க்கான முறையீடுகளை) உரிய தீர்வுகள் காணும் பொருட்டு நிதி துறையில் தனியே ஒரு ஊதிய குறை தீர்க்கும் பிரிவு ................................ அமைத்து அரசு ஆணையிடுகிறது.

               எனவே அரசாணை 71 இல் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைத்து ஆணையிடப்பட்டது  இந்த அரசாணையின்படி ஊதிய குறைப்பு செய்யப்பட்டவர்களின் முறையீடுகளை பரிசீலிக்க மட்டும் கிடையாது என்பது தெளிவாகிறது.  இவ்வாறு அமைக்கப்பட்ட பிரிவு செயல்பட 6  பேர் நீதிமன்ற தடையாணை பெற்றனர். அந்த தடையாணை தற்போது நீக்கப்பட்டு மீண்டும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.  அரசாணை 71 இல்  அமைக்கப்பட்ட பிரிவின் பணி தொடர்கிறது.  இதற்கு மேல் விளக்கினால் உங்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை. ஆறாவது ஊதிய குழுவின் முரண்பாடுகள் களையப்படும் என்ற  தேர்தல்  வாக்குறுதிப்படி  மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்  தற்போது இந்த பிரிவின் மூலம் ஊதிய முரண்பாடுகளை நிச்சயமாக சரி செய்வார்கள்.

         நம் அன்பு சகோதரர்கள் சிலர் அரசாணையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், இந்த அரசாணையில் copy to என்ற இடத்தில் கல்வித்துறை என்று இல்லை,  எனவே இது நமக்கு கிடையாது என்றும் அரசாணையில் குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் தான் இது பொருந்தும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்.(All Secretary to Govt என உள்ளது.) இதில் Education Secretary அவர்களும் உள்ளடங்குவார்கள்)  இன்னும் சிலர் நீதிமன்றம் சென்று இந்த பிரிவில் எங்களையும் சேர்க்க உத்தரவிட கேட்க போகிறோம் என்கின்றனர்.  அரசாணையை தெளிவாக படித்தாலே இந்த பேச்சுகளுக்கே இடமிருக்காது.  அவசரம், (அறியாமை என்று கூட சொல்லலாம்,) ஆர்வ மிகுதியால் நீதிமன்றம் சென்றால் அரசாங்கத்திடம் கெட்ட பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.  அரசு, குழு அமைத்திருக்கும்போது நீதிமன்றம் சென்றது யார் என்பதற்கு இடைநிலை ஆசிரியர்கள் என்ற பதில் வந்தால் ஒரு சிலரால் அனைத்து இடைநிலை ஆசிரியர் சமுதாயத்திற்கும் அவப்பெயரும் பாதிப்பும் ஏற்படலாம்.

  ஒரு நபர் குழுவில் இல்லாத ஒரு வாய்ப்பு இந்த பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது OMC  இல்  INDIVIDUAL REPRESENTATION   கிடையாது.  ஆனால் தற்போது individual representation  வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  எனவே ஒவ்வொருவரும் கோரிக்கை மனு அனுப்புங்கள். நீதிமன்றம் செல்லும் எண்ணங்களை விட்டுவிட்டு  அரசாணையை கொஞ்சம் ஆழ்ந்து படியுங்கள். நல்லது நடக்கும் நேரம் நெருங்கி வரும்போது தடையாக  இருந்துவிடாதீர்கள். இந்த களம் யாரையும் விமர்சனம் செய்வதற்கு அல்ல. நம் ஆசிரியர் சமுதாயத்திற்கு அரசாணைகளின் உண்மைகளை விளக்கவும் நன்மை பெறச் செய்வதுமே ஆகும்.

No comments:

Post a Comment