தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்படாததால் இடைநிலை  ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 

இது குறித்து கலந்தாலோசிக்க ஆயத்தக் கூட்டம் ஒன்றினை வரும் 03.08.2013 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மதுரை
Y.M.C.A. SCHOOL COMPOUND, NEAR KARIMEDU POLICE STATION, AARAPPALAYAM, MADURAI - யில் நடத்த உள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். வாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். ஒன்றுபடுவோம். 

பாதிப்பை பற்றி மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்தால் எவ்வித பயனும் இல்லை. ஜனநாயக முறையில் நமது பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.

            ஆயத்தக் கூட்டத்திற்கு 

அனைவரும் வாரீர். அவசியம் வாரீர்.



முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: விடைகள் வெளியீடு.

31 July 2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வாக்குறுதிகளை கவனத்தில் கொள்ளாத ஊதிய குறை தீர்க்கும் பிரிவு. 26.02.2011தினமணி  நாளிதழ் செய்தியில் வெளியான வாக்குறுதியினை ஆசிரியர்கள்  பார்வைக்கு வெளியிடுகிறோம்.  (நன்றி : தினமணி )

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படவில்லை. இச்செய்தி தொகுப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு FAX மூலம் கோரிக்கை மனு அனுப்பிட உள்ளார்.

உங்களுக்காக அரசாணைகள் தொகுப்பு.

நண்பர்களே உங்களுக்காக www.arivomarasanaigal.blogspot.com என்ற பெயரில் வலைத்தளம் ஒன்றினை அரசாணைகளை அறிந்துகொள்வதற்காக வைத்துள்ளோம். 

இதுவரை இதில் 

RIGHT TO INFORMATION        : 06

RIGHT TO EDUCATION              : 06

GENERAL ORDERS                     : 09

P & A. R. DEPARTMENT             : 32

FINANCE DEPARTMENT            : 35

SCHOOL EDUCATION DEPT      : 42 

என மொத்தம் 130  அரசாணைகள்  வெளியிடப்பட்டுள்ளன . படித்து பயன்பெறுங்கள். மேலும் பதிவுகள் தொடரும். இதில் அரசாணைகள் மட்டுமே இடம்பெறும். கல்வி செய்திகள் இடம்பெறாது. 




   
 G.O. No. 237 Dt.22.7.2013. Grant of One Additional Increment of 3 % பற்றிய  ஓர் விளக்கம்.

   நம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

  அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay"  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 

     அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.

 இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது. 

பத்தி 3 இல் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection grade/special grade நிலையை  அடையும் போது an additional increment benefit (3% + 3%) பெற அரசு வகை  உத்தரவிட்டுள்ளது. 

நமது விளக்கம்:

31.12.2005 - இன் போது  பணியில் இருந்தவர்கள் 1.1.2006 இல் புதிய  விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள். (தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் )

1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800  லும், தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 9300 விகிதத்தில் G.P.4300 லும் வைக்கப்பட்டிருப்பர்.

இவ்வாறாக 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயத்தை தொடர்ந்து 2800 தர ஊதியத்தில் உள்ள  தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள்,  தேர்வுநிலை அடையும்போது தற்போது கூடுதலாக 3% INCREMENT பெற்று கொள்ளலாம்.  உதாரணமாக 2800 தர ஊதியத்தில் உள்ள  ஒருவர் 2008 ஆம் ஆண்டு தேர்வுநிலையை அடைந்திருந்தால் அப்போது 3% INCREMENT பெற்றிருப்பார். அவர் தற்போது கூடுதலாக 3% INCREMENT சேர்த்து கணக்கிட்டுகொள்ளலாம். நிலுவைத்தொகை கிடையாது. பணப்பயன் 1.4.2013 முதல் பெறலாம்.

   இதைபோல 1.1.2006 இல் தேர்வுநிலை பெற்று 9300 ஊதிய விகிதத்தில் 4300 தர ஊதியத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டவர்கள், அவர்கள் சிறப்புநிலை அடையும்போது கூடுதலாக 3% INCREMENT பெற்றுகொள்ளலாம். 

  தொகுப்பூதியதாரர்களும் மற்றும் அதற்க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களும் தேர்வுநிலை அடையும்போது 3% + 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.

   சுருக்கமாக சொன்னால் REVISED SCALES OF PAY இல் தேர்வுநிலை/சிறப்புநிலை பெறுபவர்கள் 3% + 3% INCREMENT பெறலாம். 


OPTION   அளித்து தேர்வு நிலை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:

      OPTION அளித்து தேர்வுநிலை ஊதிய நிர்ணயமான 9300 +  G.P. 4300 இல் ஊதியம் நிர்ணயம் செய்துகொண்டவர்கள் சிலர்  நாங்களும் 1.1.2006 இக்கு பின்னர்தான் தேர்வுநிலை பெற்றோம் எனவே எங்களுக்கும் கூடுதலாக 3% உண்டா என்று கேட்கின்றனர். இல்லை என்றால் சங்கடப்படுகின்றனர். எனவே விளக்கம் கூற  விரும்புகிறோம்.

    உதாரணமாக 1.1.2008 இல் தேர்வுநிலை   பெற்றவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய  விகிதத்தில்  ஊதிய நிர்ணயம் செய்யும்போது 5200 - 20200 + 2800 தான் பெற இயலும். எனவே அவர்1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளாமல்,  1.1.2008 வரை முந்தைய அதாவது பழைய ஊதிய விகிதத்திலேயே இருந்துவிட்டு 1.1.2008 இல் புதிய ஊதிய விகிதத்தில் தங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்துகொண்டிருப்பார். 

     இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் OPTION அளித்தவர்கள் பழைய ஊதிய விகிதத்தில் தான் தேர்வுநிலை பெற்று,  பின்னர் புதிய ஊதியத்திற்கு வருகின்றனர்.  இவர்கள் அடுத்ததாக சிறப்புநிலை பெறும்போதுதான் கூடுதலாக இந்த 3% பெற இயலும். 

      வேறு ஏற்புடைய சந்தேகங்கள் உங்களுக்கு தோன்றினால் தொடர்பு கொள்ளுங்கள். My email   trichythomasrockland@gmail.com

  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.) சார்பில் அதன் மாநில துணை பொதுசெயலாளர் என்ற நிலையில் TN ஆசிரியர் அரங்கம் மூலம் எனது பணி உங்களுக்காக தொடரும். 

            நன்றி நண்பர்களே!
 
     ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள். கருத்துக்களை கூறுங்கள். நம் நண்பர்களுக்கு பயன் உள்ளவர்களாக இருப்போம்.  



  





பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு.

28 July 2013 
அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிகாரில் ஆசிரியர்களுடன் அரசு பேச்சு


28 July 2013.
பிகாரில் மதிய உணவு திட்டப் பணியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராடிவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் மாநில அரசு சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடத்தியது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தால் மாநிலத்தில் சுமார் 5 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு பரிமாறப்படவில்லை.
இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மாநில அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அரசு தரப்பில் தொடக்க கல்வி இயக்குநர் ஏ.கே.செüத்ரி பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
அரசுடன் நடந்த பேச்சு வார்த்தை நல்ல முடிவை எட்டும் விதமாக இருந்தது என்று தொடக்க கல்வி ஆசியர் சங்கத் தலைவர் பிரஜநாதன் சர்மா கூறினார். இது தொடர்பாக திங்கள்கிழமை விரிவாக கலந்தாலோசித்து எங்களது முடிவை அரசுக்குத் தெரிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி - மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவு.G.O.263 SCL EDN DEPT. DATED.22.07.2013.


RE - OPTION அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. G.O. 240 Dt.22.7.2013

    அதாவது 1.1.2006 டு 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.

    உதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல் ஒருவர் தேர்வு நிலை பெற்றிருந்தால், அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது, 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதாவது தேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம்.

   இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் சார்பில் அரசாணைகள் வெளியீடு.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் மாற்றமில்லை.

தேர்வு/சிறப்பு நிலைகளுக்கு கூடுதலாக 3% உயர்வு. (3% + 3%)

PA TO DEO வுக்கு G.P. 4900 லிருந்து 5100 ஆக உயர்வு.

BC AND MINORITY DEPARTMENT  இல் உள்ள இடைநிலை ஆசிரியர் தரத்தில் உள்ள SECONDARY GRADE WARDEN -க்கு 5200 -20200 + S.A.500  லிருந்து 5200 -20200 +P.P.750 இம்  B.T. WARDEN - க்கு BT G.P 4600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 இதனை பார்க்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
இடைநிலை ஆசிரிய நண்பர்களுக்கு ஓர் விளக்கமும் வேண்டுகோளும்.

ஆறாவது ஊதிய  குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்கிட ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

ஒரு நபர் குழுவின் அறிக்கைக்குப் பின்னரும் ஊதிய முரண்பாடுகள் தொடர்ந்ததால் ஏற்ப்படுத்தப்பட்டது மூன்று நபர் குழு என்று அழைக்கப்படுகிற ஊதிய குறை தீர்க்கும் பிரிவு. (இதன் அறிக்கை அடிப்படையில் வெளிவரப்போகும் அரசாணைகளை அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.) 

இவ்வாறிருக்க "ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் Diploma Qualification உள்ள பணியிடங்களுக்கு ரூ.2800 லிருந்து ரூ.4200 /- ஆக திருத்தியமைக்கப்பட்டது.  இ.நி.ஆ.  பணியிடத்திற்கு மாற்றப்படவில்லை - அரசு பதில்"  என RTI யில் தகவல் என வெளிவந்துள்ள தகவலை கண்டு, கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் வேதனயுடன் பதறி விளக்கம் கேட்டு வேதனை அடைந்துவருகின்றனர்.

இதனால் என் இடைநிலை ஆசிரியர் சமுதாய நண்பர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலையில் இதனை பதிவு செய்கிறேன்.

இன்னும் 500 வருடம் கழித்து RTI யில் ஒரு நபர் குழுவின் இடைநிலை ஆசிரியர் ஊதிய விவரம் கேட்டால் 5200 - 20200 +2800 என்று தான் தருவார்கள்.

ஒரு நபர் குழுவின் முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அதாவது ஊதிய குறை தீர்க்கும் பிரிவிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்படவில்லஎன்றால்  தான் கவலைப்பட வேண்டும். 

17.4.2013 இல் கையெழுத்திடப்பட்ட கடிதம்,  மூன்று நபர் குழ அறிக்கை அடிப்படையில் அரசாணைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் வெளியிடப்பட்டிருப்பது வீண் குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது. 

இடைநிலை ஆசிரியர் சமுதாய நண்பர்களே, மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன். ஒரு நபர் குழுவில் முரண்பாடுகள் இருந்ததால் அமைக்கப்பட்டதுதான் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு.  

ஒரு நபர் குழு அரசாணை விவரங்களில் இடைநிலை ஊதிய விவரம் உள்ளது. இதனை RTI இல் கேட்டால் ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தர மாட்டார்கள். இது விமர்சனம் அல்ல. பதறிய என் நண்பர்களுக்கான விளக்கம்.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(T.A.T.A.) சார்பில்  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் தெளிவாக முன்வைத்துள்ளோம். நிச்சயம் நம் நம்பிக்கை வீண் போகாது. பொறுமை கொஞ்சம் நமக்கு அதிகம் வேண்டும். காத்திருப்போம் நண்பர்களே. RTI தகவல்களை கண்டு அஞ்சி விடாதிருங்கள். 

Relax please 






CPS திட்டத்தில் செலுத்தப்படும்  சந்தா தொகையை பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை எதிர்த்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வார காலத்திற்கு தடையாணை பெற்ற விவரத்தை குறிக்கும் தடையாணை நகலை உங்களுக்காக வெளியிடுகிறோம். 

தற்போது தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் இத்திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் சந்தா தொகையினை சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பாக ஆசிரியர்களிடம் கையொப்பம் கேட்கப்பட்டதாகவும், அதற்க்கு ஆசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்றும் அறிய வருகிறோம். 

இதனை தொடர்ந்து இத்தகவலை உங்களுக்காக வெளியிடுகிறோம். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.) இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடமும், அதனை தொடர்ந்து தமிழக அரசிடமும் பாதிப்புகளை தெளிவாக தங்களின் மனுக்களில் விளக்கியுள்ளது. நல்லதொரு தீர்வினை மிக விரைவில் காண்போம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்ட பாதிப்புகளையும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் தமிழக அரசிடம் கொண்டு செல்லும் உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்புடன். படியுங்கள். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகளை அறியுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ஒன்றுபடுங்கள் எங்களுடன். உழைப்போம் இடைநிலை ஆசிரியர் நலன் காத்திட. அத்துடன் செயல்படுவோம் அனைத்து நிலை ஆசிரியர்களின் நலன் காக்கப்பட.





மத்திய, மாநில அரசின் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு.

திருச்சி: "திருச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்கள், மத்திய, மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது' என, கலெக்டர் ஜெயஸ்ரீ அறிவித்தார்.இதுகுறித்து, கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்ட அறிக்கை:

நீலகிரியில் கனமழை: கூடலூர்,பந்தலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.


நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதை அடுத்து மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 22.7.2013 (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருது - தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "சிறந்த செயல்பாடுகளுக்கான விருது 2013. தகுதியுடையோர்   விண்ணப்பங்களை  23.07.2013- க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.






பள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு.

சென்னை: அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: நபார்டு வங்கி கடனுதவி மூலம், அரசு பள்ளிகளில், புதிய கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.
"பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவையான எண்ணிக்கையில், கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும்" என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அரசாணை வெளியிடப்பட்ட நாள் (18.01.2013) முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil.அல்லது M.Ed அல்லது P.hdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு.


தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை அறிவியல் கல்லூரியின் அறிவியல் ஆய்வகங்களுக்கு அழைத்துசெல்லப்பட்ட நிகழ்வின் தொகுப்பு உங்களின் பார்வைக்கு.

    பள்ளி செயலர் திரு.சோமசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் அவர்கள் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் செல்வம் மற்றும் இடைநிலை ஆசிரியர் முத்துலட்சுமி அவர்களுடன் எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியர்களை கல்லூரி  ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் அவர்கள் தலைமையில், விலங்கியல் துறை தலைவர் திரு.பட்சிராஜன்  முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

மாலையில் கல்லூரி முதல்வர் அவர்கள் மாணவ -  மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.நிகழ்ச்சியின் நிறைவாக தாவரவியல் துறை துணை தலைவர் வீரலட்சுமி அவர்கள் நன்றி கூற மாணவர்களை மகிழ்வித்த இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு உங்களுக்காக.   
















TRAINING MODULE FOR FIRST STANDARD ENGLISH MEDIUM TEACHERS.
             

CLICK HERE TO DOWNLOAD

நன்றி. DIET - DINDIGUL DT.

மருத்துவப் படிப்பில் சேர ஒரே நுழைவுத்தேர்வு

இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

புதுடில்லி: நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

புதிய பாடதிட்டத்தில் கற்பித்தல் என்பது இனி

கிடையாது!

தூத்துக்குடி: ஆசிரியர்கள் பணி என்பது முன்பு கற்பிப்பவர்தான். ஆனால் தற்போது வந்துள்ள புதிய கல்விமுறைப்படி மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வி வழிகாட்டிதான் என்று தூத்துக்குடியில் நடந்த பயிற்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் இளையராஜா பேச்சு.

மதுரை:  பள்ளிகளில் இசையை கட்டாயப் பாடமாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில்  பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.

திறந்தவெளியில் கல்வி கற்பிக்கும் அவலம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பூலங்குடி காலனியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால், கடந்த 4 ஆண்டுகளாகவே திறந்தவெளியில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
திருவெறும்பூர் அருகேயுள்ள பழங்கானங்குடி ஊராட்சிக்குள்பட்டது பூலாங்குடி காலனி. இங்கு அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் பூலாங்குடி காலனி, கலப்பு காலனி, பழங்கானங்குடி, எலந்தைப்பட்டி, காந்தலூர், சூரியூர், சின்னசூரியூர், போலீஸ் காலனி, அண்ணாநகர், துப்பாக்கி தொழிற்சாலை, நவல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலில் இருந்து 600 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நூல்கள் வீடு தேடி வரும்.

திருச்சி மாவட்ட மைய நூலகத்துக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி நூல்களை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.

பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு. G.O.123 SCHOOL EDUCATION DEPT Dt.15.7.2013 

              ஆசிரியர்பட்டயப்பயிற்சி 
"கவுன்சலிங்'நிறைவு:- திருச்சி மாவட்டத்தில், 48 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 

திருச்சி: ஆசிரியர் பட்டயப்பயிற்சியில் கவுன்சிலிங் மூலம் திருச்சி மாவட்டத்தில், 48 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சேர ஆள் இல்லாமல் காலியாக உள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்: தனியார் பள்ளிகளில் 18,946 மாணவர்களுக்குச் சேர்க்கை.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 18,946 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் (பொறுப்பு) ஆர்.பிச்சை தெரிவித்துள்ளார்.
கல்வி வளர்ச்சி நாளில் ஒரு அரசாணை பற்றி தெரிந்து கொள்வோமே!

அரசாணை எண். 126 நாள். 11.06.2007.

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பத்தாம் வகுப்பிலிருந்து வகுப்பு XI -க்கு மாணவர்களை சேர்ப்பது சார்ந்த ஆணை.

படித்த அதே பள்ளியில் பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பது புதிய  சேர்க்கையாக கருதிட கூடாது. எனவே அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் T.C. கொடுத்து பதினொன்றாம் வகுப்பில் மறு சேர்க்கை செய்வது விதிமுறைகளுக்கு எதிரானது என உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விரிவாக அரசாணையில் படித்து தெரிந்து கொள்வோம். நம் சமுதாயத்தை மேம்படுத்துவோம்.

தொடக்கக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

ஆறாவது ஊதிய குழுவும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.

அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள   
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்    குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். 

ஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009  வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,

             அடிப்படை ஊதியம்              :   4500
              அகவிலைப்படி ஊதியம்    :   2250
              அகவிலைப்படி 24%              :   1620
                                                                   =======
       (DA G.O.188.Dt.17.4.06)  TOTAL      :     8370
                                                                  =======

ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் 

                          அடிப்படை ஊதியம்     :    5200
                          தர ஊதியம்                     :    2800
                          அகவிலைப்படி              :    NIL
                                                                          =======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL   :     8000
                                                                          =======

முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)

இவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு  கொடுக்கப்பட்டது. 

பெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ  அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.

(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)

               01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது.  அரசாணை  258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.

       Certain Employees / Teachers  Associations have brought to the notice of Government that the employees appointed as fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders happen to face loss in emoluments while fixing their pay in the revised pay structure and therefore requested to rectify the same by granting pay protection of allowing the fitment benefit to the new entrants as was allowed in the earlier pay commission periods.

  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது. 

பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம். 

             பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது   
                 பணியாளர் சங்கத்தில் 
    பணி  ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது  
              ஓய்வு பெற்றோர் சங்கத்தில் 

          அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால் அபாயம் ஒன்றுமில்லை 
அடுத்தவர் முதுகில் ஏற நினைத்தால் அதனால் வரும் இது போன்ற ஊதிய பாதிப்பு தொல்லை. 

ஒரு அரசாணை தொகுப்பின் துவக்கத்தில் படித்த மகாகவி பாரதியின் வரிகளை பதிவு செய்து விடைபெறுகிறேன்.

        தேடிச் சோறு நிதம் தின்று 
       மனம் வாடப் பழங்கதைகள் பேசும் 
       சில வேடிக்கை மனிதரைப் போல 
       வாழ்வேன் என்று நினைத்தாயோ.

எத்தனை அருமையான வரிகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.

படியுங்கள், சிந்தியுங்கள் விழிப்படையுங்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE G.O. 258 Dt.23.5.09.


தொகுப்பு:        சே. தாமஸ்  ராக்லண்ட்
                   மாநில துணை பொதுசெயலாளர் 
       தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம். (T.A.T.A.) 



சுதந்திர தின விழா 2013 - அனைத்து கல்வி அலுவலகங்களிலும் பள்ளிகளிலும், சிறப்பாக கொண்டாடிட  அறிவுரை  வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்  உத்தரவு.


2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடு.



சென்னை: வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.
ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் முதல், செப்டம்பர் வரை, முதல் பருவம்; அக்டோபர் முதல், டிசம்பர் வரை, இரண்டாம் பருவம்;  ஜனவரி முதல், ஏப்ரல் வரை, மூன்றாம் பருவம் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

அப்பீல் மனு முடியும் வரை காத்து இருக்கக் கூடாது; குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி ரத்து - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை ரத்து செய்யலாம் என்றும், ஏற்கனவே அப்பீல் செய்தவர்களுக்கு இது பொருந்தாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை அளித்து இருக்கிறது.

அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால் தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகள்கூட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளாக பதவியில் தொடருகிற நிலை உள்ளது.

டி.இ.டி., தேர்வை வற்புறுத்தாமல் 94 பேருக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு



சென்னை: "ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட்டில் பிறப்பித்த உத்தரவுக்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள், ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டியதில்லை" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இலவச கட்டாய கல்வி சட்டம், 2010, ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தான் நியமிக்க வேண்டும். தமிழக அரசும், இதற்கான உத்தரவை, 2011, நவம்பரில் பிறப்பித்தது.

நீலகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (11.07.2013)விடுமுறை.

நீலகிரி:கனமழை காரணமாக நாளை நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். 
Click Here


பள்ளிக்கல்வி - அகஇ சார்பில் 2013-14ம் கல்வியாண்டில் வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய பணிமூப்பு பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் 100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு.

சென்னை: மாநிலம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை அருகே ஒரே ஒரு மாணவருக்காக இயங்கும் பள்ளி.


கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த கள்ளர்குடி என்ற பகுதியில் இயங்கும் கள்ளர்குடி பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார்.

பசுமை பள்ளி உருவாக்குவது எப்படி? தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி.

திருச்சி: பள்ளி மற்றும் சுற்றுப்புற தூய்மை, பசுமை பள்ளிகளை உருவாக்குவதற்கான வழிமுறை குறித்து, திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.

DR.RADHAKRISHNAN AWARD PROCEEDINGS AND APPLICATION FORMAT

இடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை விளக்கும் கட்டுரை.


ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக  நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.

தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான  D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி  அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A  அரசாணை  வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய ஊதிய விகிதமே  இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

         BASIC PAY                          =       4500
         DEARNESS PAY (D.P)        =       2250
         D.A. 166%                             =     11205
                                                           ___________
         TOTAL                                          17955
                                                           ____________
         (D.A. நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இன் படி)

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

           BASIC                                 =      5200
           GRADE PAY                       =      2800
           P.P.                                    =        750
           D.A. 80%                             =      7000
                                                              _________
           TOTAL                                        15750
                                                              __________


ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு 

                              17955 - 15750 = 2205

எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை  வெளியிடப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை எங்கள் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.) 
தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வருகிறது. வேறு எந்த சங்கமும் இந்த அளவிற்கு பாதிப்பை குறிப்பிட்டு கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை. 
எங்கள் சங்கம் மூத்த ஆசிரியர்களுக்கோ அல்லது ஒய்வு பெற்றவர்களுக்கோ எதிரானது அல்ல. அவர்களின் பணி, பெற்றுகொடுத்த பயன்கள் மறுக்கவோ, மறக்கவோ, முடியாதவைகள். இருப்பினும் பணியாளர் சங்கங்களில் பணியில் இருப்போரே அங்கமும், பொறுப்பும் வகிக்க வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்.

இதனை இங்கு ஏன்  குறிப்பிடுகிறேன் என்றால்,முற்றிலும் பணியில் இருப்போரை கொண்டதாக சங்கங்கள் இருந்திருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை அரசுக்கு  தெரியப்படுத்தி பாதிப்பை சரிசெய்திருக்கலாம். 

இடைநிலை ஆசிரியர் சமுதாய தோழர்களே  சிந்தியுங்கள். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

                                             உங்கள் நண்பன் 
                                     சே. தாமஸ் ராக்லண்ட்
                                 துணை பொதுசெயலாளர் 
                   தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்  
                                              T.A.T.A


       

தொடக்கக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது 2012 - 13ஆம் ஆண்டு டாக்டர் இராதகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தேர்வுக் குழு அமைத்தல், விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. ந.க.எண். 016965/ஜே2/2013.


IGNOU

இந்திராகாந்தி திறந்த நிலைபல்கலைகழகத்தின் 
மதுரை மண்டலம் மாற்றம்.


சாத்தான்குளம்:இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறில், நெடில் அறியாத மாணவர்கள். .. தமிழுக்கு வந்த சோதனை.



கோவை: கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.