மாற்றுத் திறனாளிகளுக்கு நூல்கள் வீடு தேடி வரும்.

திருச்சி மாவட்ட மைய நூலகத்துக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி நூல்களை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நூலகத்துக்கு வர இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே நூல்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மேலரண் சாலையிலுள்ள மாவட்ட மைய நூலகத்திலிருந்து 2 கிமீ சுற்றளவில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நூல்கள் வழங்கப்படும்.
எனவே, மாற்றுத் திறனாளிகள் தங்களின் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களை மாவட்ட நூலக அலுவலர், மேலரண் சாலை, திருச்சி- 8 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ, அல்லது க்ஸ்ரீப்ற்ழ்ஹ்ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 7402603631 என்ற செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு பதிவு செய்யும் நபர்கள், இல்லத்திலேயே நூலக உறுப்பினர் ஆக்கப்படுவார். மேலும் வாரம் ஒரு முறை நூல்களும் இரவலாக இல்லம் தேசி வழங்கப்படும்.
ஒரு நூலை இரவலாகப் பெற காப்புத் தொகை ரூ. 20, இரு நூல்களுக்கு ரூ. 40, மூன்று நூல்களுக்கு ரூ. 50 செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ரூ. 10 சந்தாவாகச் செலுத்த வேண்டும்.  இரவலாகப் பெறப்படும் நூல்களை படிக்க 15 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.


No comments:

Post a Comment