ஏடிஎம்மில் பணம் எடுக்கக் கட்டணம் : மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசம்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள ஏடிஎம் மையங்களிலேயே ஒரு மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம், மத்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.
வாடிக்கையாளர் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் அதற்கு கட்டணம் இல்லை. ஆனால் அதுவே வேறு ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்தில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்பட அனைத்து ஏடிஎம் மையங்களையும் சேர்த்து மாதம் 5 முறை மட்டுமே கட்டணமில்லாமல் பணம் எடுக்க அனுமதிக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.
No comments:
Post a Comment