ஆதர் எண்: எரிவாயு நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.

Jan.2
வங்கிகளில் ஆதார் எண் பதிவு செய்ய கட்டாயப்படுத்தும் எரிவாயு நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

  விருதுநகர் மாவட்டம் ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.எம்.ஆனந்த முருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
 மனு விவரம்: ஆதார் அடையாள அட்டை தயாரிக்கும் பணியை மத்திய அரசு ரூ. 50 ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு பணி வழங்கப்படும் முன்பு அந்த நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதா, அதன் ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களா என பரிசீலித்து முடிவெடுக்கவில்லை.
மேலும் வெளிநாட்டு நிறுவனத்தை நியமிக்க சட்டபூர்வ அங்கிகாரம் பெறப்படவில்லை.ஆதார் அட்டையில் இந்திய குடிமக்களின் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறுகின்றன. இவை வெளிநாட்டு நிறுவனம் மூலம் எதிரி நாடுகளுக்கு வழங்கப்படுóம் அபாயம் உள்ளது. எனவே ஆதார் அடையாள அட்டையை தயாரிக்க தனி துறையை ஏற்படுத்தி, அதற்கான பணியாளர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டுóம்.
  ஆதார் அட்டை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.பட்டுசாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஆதார் அட்டை பெறாதவர்களை எந்த வகையிலும் கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை பெறுவது கட்டாயமில்லை என மத்திய அரசும் உறுதி கூறியுள்ளது. இவ்வழக்கில் ஆதார் அட்டைக்கான சட்டபூர்வ அந்தஸ்து குறித்து பதில்மனுக்களை தாக்கல் செய்யும் படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
  இவ்வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் எரிவாயு மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை வங்கிகளில் பதிவு செய்யுமாறு செல்போன் எஸ்எம்எஸ் மூலம் எரிவாயு நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கை உச்சநீதி மன்ற உத்தரவை மீறியதாகும். எனவே ஆதார் எண் கேட்கும் எரிவாயு நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆதார் எண் பெறாதவர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்க மறுக்கும் எரிவாயு ஏஜென்சிகளுக்கு மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டுóம். ஆதார் அட்டை தொடர்பான இறுதி முடிவு வரும் வரையில் அரசு சேவைகளுக்கு இத்திட்டத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மனுவுக்கு வரும் 7-ம் தேதிóககுள் விளக்கம் அளிக்குமாறு மத்திய கேபினட் அமைச்சக செயலர், மத்திய உள்துறை, பெட்ரோலியத் துறை செயலர்கள், இயற்கை எரிவாயு நிறுவனத்தலைவர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

No comments:

Post a Comment