தகவல் ஆணையம் தொடக்கக் கல்வி இயக்குனருக்கு உத்தரவு
It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
மத்திய பட்ஜெட் - மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.
டெல்லி: இந்த 2013-14ம் நிதியாண்டிற்காக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், கல்விக்காக, கடந்தாண்டைவிட கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி என்பது அரசின் உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தைப் பெற்ற துறையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை சிறப்புச் செயலாளராக பி.அமுதா நியமனம் தமிழக அரசு உத்தரவு.
சென்னை. 27.2.13.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் பி.அமுதா மாற்றப்பட்டு, உள்துறை, மதுவிலக்கு, கலால் துறை சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பிறப்பித்தார்.
தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கம்.
சென்னை: தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்றுஅமைச்சர்களை நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பதில் மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, பள்ளி கல்வி, இளைஞர் நலன் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்த என்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எஸ்.விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில், டி.பி.பூனாட்சி, டாக்டர் வைகைச்செல்வன், கே.சி.வீரமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்
நன்றி... நன்றி.... நன்றி.....
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை பெற வேண்டும் என்பதற்காக பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. இயக்கம் சார்பில் பெறப்பட்ட RTI தகவல்கள் மற்றும் அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு பெறப்பட்ட கடிதங்கள் போன்றவை ஒருசில சான்றுகளாகும். இவைகள் சமீபத்தில் இணையவழி மூலம் அறிந்திருப்பீர்கள்.
இவைகளை வெளியிட்டு நம் ஆசிரியர் சமுதாயம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஊதிய குழு சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள செய்ததற்கும், மற்றும் எங்கள் சங்கத்தின் செயல்பாடுகளை நம் ஆசிரிய நண்பர்கள் அறிந்து கொள்ளவும்
இச்செய்திகளை வெளியிட்ட இணையவழியில் கல்வி சேவை செய்துவரும் எனதருமை நண்பர்கள் திரு. சதீஷ் (TN KALVI) அவர்களுக்கும் மற்றும் திரு.கார்த்திக் (TN TAM) அவர்களுக்கும் இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
நண்பர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி. எங்கள் பணி தொடரும் இவர்கள் போன்ற நண்பர்களின் ஒத்துழைப்புடன். தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்.
அன்புடன் C.T. ROCKLAND, DEPUTY GENERAL SECRETARY.
வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கான விழாக்களின் பட்டியலை விளக்கும்
அரசாணைகளை உங்களுக்காக வெளியிட்டுள்ளோம். பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
நாட்களின் பட்டியல்.
Click Here to Download the G.O.
G.O.No.36. Dt.02.03.2012 பகவான் வைகுந்தசாமி பிறந்த நாள்
வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்ப்பு.
Click Here to Download the G.O.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் 1.6.2009 க்கு பின்னர் நியமனம்
பெற்றவர்களை வைத்து ஏன் கோரிக்கை வைக்கிறது என்பதற்கான விளக்கம்.
அனைவருக்கும் வணக்கம். எங்கள் சங்கம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவதில் அதிக அக்கறையுடன் செயல்படுவதை சமீபத்தில் எங்கள் சங்கம் பெற்ற RTI தகவல்கள், மற்றும் நிதிதுறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை நமது நண்பர்களின் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
தற்போது (01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வந்துள்ள தகவலை பார்த்து 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் பாதிப்பா ? எல்லோரும் தானே GRADE PAY 2800 வாங்குகிறோம் என கேட்கின்றனர். அவர்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
அரசாணை 234 வெளிவந்தபோது தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்திற்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய ஊதியமானது, அவர்கள் முன்பு பெற்றுவந்த ஊதியத்தை விட குறைவாக இருந்தது. இவ்வாறான் நிலை இடைநிலை ஆசிரியர்களுடன் சேர்த்து மொத்தம் மூன்று ஊதிய பிரிவினருக்கு மட்டும் ஏற்ப்பட்டது. இதனை நம் முன்னோடி சங்கங்கள் தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்ப்பட்டிருக்கும். மாறாக 1.6.2006 க்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய ஊதியமானது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தை விட குறைவாக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு மிகைப்படுத்தி தகவல் தந்து கோரிக்கை விடுத்தனர்.
அதன் விளைவு அரசாணை 258. சங்கங்கள் சொன்னதாக இந்த அரசாணையில் உள்ளது. யாரும் நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லவில்லை என்று மறுக்க முடியாது. இதன் விளைவு 1.6.2006 லிருந்து 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 முறை வந்தது. இதை விளக்கினால் விளக்கிக்கொண்டே போகலாம்.
அரசாணை 234 வெளிவந்தபோதே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையாக அரசுக்கு முன்வைக்கவில்லை நம் முன்னோர்கள். இதன் தொடர் பாதிப்புதான் 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5200 + 2800 +750. 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆறாவது ஊதிய குழு வராமல் இருந்தாலே அதாவது முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக இருந்திருக்கும். இடைநிலை ஆசிரியர்களின் பாதிப்பை அரசுக்கு எடுத்துக்காட்ட இவர்களையே முன்வைத்து பாதிப்பை முன்வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இவர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படுத்த அரசு முன்வரும்போது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் முறையான ஊதிய மாற்றம் வரும்.
எங்கள் சங்கம் சார்ந்த முயற்சிகளின் விவரங்களை அறிந்து கொள்ள உங்கள் இ - மெயில் முகவரியை cthomastata@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கு தொகுப்புகளை அனுப்புகிறோம். பொறுமையாக படித்ததற்கு நன்றி.
உங்கள் நண்பன் C.T. ROCKLAND. DEPUTY GENERAL SECRETARY, TAMILNADU ALL TEACHER ASSOCIATION.
கணித திறமையை வளர்த்துக் கொள்ள..
உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (T.A.T.A) பொது செயலாளர் கோரிய தகவல்களுக்கு RTI பதில்கள் உங்களின் பார்வைக்கு.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( T.A.T.A.) அதிக அக்கறையுடன் செயல்படுகிறது என்பதற்கு ஆதாரமான செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.
‘‘கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்தது சரியல்ல’’ விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி வழக்கு தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
Feb 19
மதுரை
கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வில்(‘ஸ்லெட்‘) கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்தது சரியல்ல என்று கூறி, தகுதித்தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு
திருச்சியில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வங்கி ஊழியர்கள் உதவியுடன் பல லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டது அம்பலம் போலீஸ் சோதனையில் போலிமுத்திரைகள், முக்கிய ஆவணங்கள் சிக்கின.
திருச்சியில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி கைதானவரின் அறக்கட்டளை அலுவலகம், வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களும், குவியல், குவியலாக போலி முத்திரைகளும் சிக்கின.
விண்வெளி அறியியல் உண்மைகள்.
- கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் மட்டுமே.
- யுரேனஸ் 27 சந்திரன்களை கொண்டுள்ளது.
- நெப்டியூன் 13 சந்திரங்களை கொண்டுள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
- வியாழன் கிரகம் குறைந்தது 63 சந்திரங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
- பூமியில் 100kg எடையுள்ள ஒரு நபர் செவ்வாய் கிரகத்தில் 38kg எடையுடன் இருப்பார். செவ்வாயில் குறைவான புவி ஈர்ப்பு விசையே காரணம்.
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. SCHOOL EDUCATION G.O. Ms. No. 23 Date.11.2.13.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.
CLICK HERE TO VIEW THE RESULTS.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி குரூப்-2 தேர்வை நடத்தியது. 3,687 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் நவம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 22-ம் தேதி நேர்காணல் நடக்கிறது.
CLICK HERE TO VIEW THE RESULTS.
வறட்சி - தமிழகத்தில் சென்னையை தவிர்த்து ஏனைய 31 மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தல் - காவேரி நதி நீரை கர்நாடகம் திறந்து விடாத நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு அதனால் ஏற்பட்ட வறட்சி குறித்து காவேரி சிறப்பு கூடுதல் நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
பிடித்தமான பதவியை தேர்வு செய்யும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகம் டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை நடத்துகிறது.
சென்னை
பிடித்தமான பதவியை தேர்வு செய்து கொள்ளும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறையில் முதலாவது கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
கண்டுபிடிப்புகள் கைவந்த கலை : இன்று(11.02.13) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்.
இன்றைய உலகம் சூரியன் மøந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர்அமெரிக்காவின் நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தார்.
ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி.
சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)