6 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசு இதழில் வெளியீடு.

புதுடெல்லி,
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, பிப்ரவரி 20ம் தேதிக்குள் அரசு இதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்திருந்தது.  இதனை தொடர்ந்து இன்று அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அரசாணை நகலை இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் நகல் இன்று தமிழ் நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுக்கு வழங்க்கப்படுகிறது. இறுதி தீர்ப்பின் படி தமிழகத்திற்கு 419 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி. தண்ணீரும், கேரளாவிற்கு 30 டி.எம்.சி. தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். அரசு இதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சட்டப்பூர்வமாக தமிழக்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை பெற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை.

No comments:

Post a Comment