கல்வி முன் கட்டணத்தை திருப்பித் தர சாஸ்த்ரா பல்கலைக்கு உத்தரவு.

முதலாம் ஆண்டு மாணவரிடம் இருந்து பெற்ற கல்வி முன் கட்டணத்தை திருப்பித் தர சாஸ்த்ரா பல்கலைக்கு தமிழ்நாடு நுகர்வோர் தீர்ப்பாயத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சாஸ்த்ரா பல்கலையில் முதலாம் ஆண்டு படித்த மனோகர் என்ற மாணவர் வேறொரு கல்வியில் சேருவதற்காக சான்றிதழ்களை கேட்டுள்ளார். அவரிடம் 5 ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால்தான் சான்றிதழ்களை அளிக்க முடியும் என்று பல்கலை கூறியுள்ளது.
இதையடுத்து முழு கட்டணத்தையும் மாணவர் செலுத்திய பிறகும் சான்றிதழ்கள் அளிக்கப்படவில்லை. இது குறித்து திருச்சி மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. மாணவர் செலுத்திய கல்வி முன் கட்டணமான ரூ.1.12 லட்சத்தை 6 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்கவும், சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்கவும் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள மதுரை தீர்ப்பாயம், உடனடியாக மாணவரின் சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்தை வட்டியில்லாமல் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபடுவது சரியல்ல என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment