அமைச்சர் வைகைச்செல்வன் பதவியில்

இருந்து நீக்கம்.

வைகைச் செல்வன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு, இளைஞர் நலம், தமிழ் கலாசாரம் உள்ளிட்ட துறைகளைக் கவனித்து வந்த அமைச்சர் வைகைச் செல்வன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மின்னணு, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைக் கவனித்து வரும் பி.பழனியப்பன் மேற்கண்ட துறைகளைக் கவனித்துக் கொள்வார் என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment