மார்க்சீட் வழங்க லஞ்சம்: பள்ளி ஊழியர் கைது.

புதுக்கோட்டை: முன்னாள் மாணவரிடம் டிசி., மார்க்சீட் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊழியராக பணிபுரிபவர் மாரிமுத்து. இந்த பள்ளியில் 2000 ம் ஆண்டு படித்த, முன்னாள் மாணவர் முத்து செல்லப்பா தனது டி.சி., மற்றும் மார்க் சீட் இரண்டையும் வழங்கும்படி கேட்டார். இதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தருவதாக கூறினார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் முத்துசெல்லப்பா புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ரத்தினவேல் தலைமையில் மாரிமுத்து லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment