மொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை.


புதுடில்லி: மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.
சிறுபான்மை பள்ளிகளுக்கு அரசு நிதிஉதவி. விண்ணப்பிக்க அழைப்பு.

                          அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் பயிலரங்கம் திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் நேற்று 31.10.2012 நடந்தது.

தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  (01.11.2012) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.

சென்னை                       - பள்ளிகள், கல்லூரிகள் 
காஞ்சிபுரம்                   - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர்                 - பள்ளிகள், கல்லூரிகள்

திருவண்ணாமலை  - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை                             - பள்ளிகள், கல்லூரிகள்
தஞ்சை                           - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை           - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர்                   - பள்ளிகள், கல்லூரிகள்

கடலூர்                           - பள்ளிகள், கல்லூரிகள் 
விழுப்புரம்                    - பள்ளிகள், கல்லூரிகள் 
இராமநாதபுரம்           - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி                  - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி          - பள்ளிகள், கல்லூரிகள்
வேலூர்                         - பள்ளிகள், கல்லூரிகள்
கரூர்                               - பள்ளிகள்
உதகை                          - பள்ளிகள், கல்லூரிகள் 
ஈரோடு                          - பள்ளிகள், கல்லூரிகள் 
திருச்சி                          - பள்ளிகள், 
கோவை                        - பள்ளிகள், கல்லூரிகள் 
பெரம்பலூர்                  - பள்ளிகள்,  
திருப்பூர்                        - பள்ளிகள், கல்லூரிகள் 

சேலம்                           - பள்ளிகள் 
தருமபுரி                       - பள்ளிகள், கல்லூரிகள்    
நெல்லை                     மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள் 
 
SPECIAL SUMMARY REVISION OF ELECTORAL ROLL PERIOD EXTENDED TO 20.11.2012.
   வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் பணி 20.11.2012 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 20.11.2012 வரை வேலை நாட்களில் விண்ணப்பம் பெறப்படும். 

        நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாது.( There will not be any special campaign during this extended period) PRESS RELEASE NO.652.DATE.31.10.12.


மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநராக இளங்கோவன் நியமனம்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில இயக்குநராக உள்ள இளங்கோவனிடம் இந்தப் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை  தாக்கும் மாணவர்கள். எங்கே செல்கிறது நமது கலாச்சாரம்?

  கற்றுகொடுப்பது என்பதும்  ஒரு கலையே. கற்றவர்கள்
எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கும் மனப்பக்குவம் வருவதில்லை. மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கவேண்டும் என்ற மனப்பக்குவம் உள்ளவர்கள் கல்விப்பணியை தேர்வு செய்கின்றனர். இப்பக்குவம் இல்லாதவர்கள் ஆசிரியர் பயிற்சியின் போது இந்த மனப்பக்குவத்தை பெற்று கொள்கின்றனர்.

     கடந்த காலங்களில் ஆசிரியர்களால் மாணவர்கள், தண்டனை என்ற பெயரில் விரும்பத்தகாத நிலையில் தண்டிக்கப்பட்ட நிகழ்வுகளை  மறுப்பதற்கில்லை. இவ்வாறான தண்டனைகளிலிருந்து மாணவர்களை நிச்சயம் பாதுகாக்கவேண்டும்.

     தற்போது கல்விக்காக, மாணவர்களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்களில் ஆசிரியர் மாணவர்களிடம் கண்டிப்பை காட்ட முடியாது, கூடாது.

   அன்பினால் எல்லாவற்றையும் செய்ய முடியும். சில நேரங்களில் கண்டிப்பு தேவைப்படத்தானே செய்கிறது. இன்று கண்டிக்க வழியில்லாததால், மாணவர்கள் ஆசிரியர்களை  தண்டிக்க தொடங்கிவிட்டனர். ஆசிரியர்களின் பாதுகாப்புக்காக யாரும்  கவலைப்படாவிட்டாலும் வருத்தம் இல்லை. இன்றைய மாணவர்களின் நாளைய எதிர்காலம் இப்படியே போனால் என்னவாகும்?

       இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக சட்டங்கள் உள்ளன.மாணவர்களை நியாயமான கண்டிப்புடன் ஆசிரியர் நடந்துகொள்ள அவசியம் சட்டம் தேவை. மருந்து கசக்கத்தான் செய்யும். கண்டிப்பும் அப்படியே இருக்கலாம். பேருந்துக்கு BRAKE அவசியம் தேவை. மாணவர்களுக்கு ஆசிரியரின் கண்டிப்பு தேவை. இன்றைக்கு பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியரைப் பார்த்து மாணவன் சொல்கிறான், சார், மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு ஜெயிலாம், என்று. வார்த்தையால் கண்டிக்கவே வழியில்லாத போது எங்கே அடிக்க?

      வேண்டவே வேண்டாம் - ஆசிரியர்களுக்கு   மாணவர்களை எந்தவிதத்திலும் அடிக்கிற உரிமை. ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க நியாயமான முறையில் கண்டிக்க உரிமை வேண்டாமா?
      
        இன்றைய நிலையில் ஆசிரியர்களின் நிலைமை - தாக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள்.  இந்த கலாச்சாரம் எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை. 

         ஆற்றுக்கு அணை அவசியம். குதிரைக்கு கடிவாளம் அவசியம். பேருந்துக்கு பிரேக் அவசியம். மாணவனுக்கு ஆசிரியரின் கண்டிப்பு அவசியம். தண்டனை வேறு. கண்டிப்பு வேறு. பிரம்பை கையாடாதவன் தன் மகனை பகைக்கிறான் என்று பைபளில் கூறப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக எண்ணியே ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனனர். இன்றைக்கு பிரம்பு வேண்டாம். மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்க்கு அனுமதி வேண்டும். எதிர்கால மாணவர்களின் வாழ்வு  சிறக்க வழி பிறக்க வேண்டும். 

         மாணவர்களால் ஆசிரியர்கள் கத்தியால் குத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இப்படியே போனால் நாளைய எதிர்காலம் எங்கே போகும்?  

            வெயிலின் வெப்பம் சுடுகிறது என்பதற்காக வெயிலே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா?  ......................................................................................
............................................................................................................................................................
     .....................................................................................................................................................

          

பள்ளிக்கல்வி - தீபாவளி 2012 பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் குறித்த செயல்முறைகள்.காவல்துறை  மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 27075 / ஜே2 / 2012, நாள். 30.10.2012.


கனமழை மற்றும் நீலம் புயல் காரணமாக தமிழகத்தில் 20மாவட்டங்களுக்கு இன்று 31.10.12. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை                     - பள்ளி, கல்லூரிகள்
திருவள்ளூர்               - பள்ளி, கல்லூரிகள்
காஞ்சிபுரம்                 - பள்ளி, கல்லூரிகள்
திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
பெரம்பலூர்                  - பள்ளி, கல்லூரிகள்
தஞ்சை                         - பள்ளி, கல்லூரிகள்
திருவாரூர்                  - பள்ளி, கல்லூரிகள்
கடலூர்                          - பள்ளி, கல்லூரிகள்
நாகை                            - பள்ளி, கல்லூரிகள்
அரியலூர்                     - பள்ளி, கல்லூரிகள் 
விழுப்புரம்                   - பள்ளி, கல்லூரிகள் 
வேலூர்                         - பள்ளி, கல்லூரிகள்
கரூர்                              - பள்ளிகள்
சேலம்                           - பள்ளிகள்
திருச்சி                          - பள்ளிகள்
திண்டுக்கல்                - பள்ளிகள்  
கிருஷ்ணகிரி              - பள்ளிகள் 
புதுக்கோட்டை          - பள்ளிகள்
தருமபுரி                       - பள்ளிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்

பாடநூல் தயாரிப்பு குழு - புதிதாக சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய 10ஆம் வகுப்புக்கான சமூகவியல் முதல் பருவ பாடப்புத்தக செயல்பாடுகளுக்கான ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் பணிமனை 05.11.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது.அனைவருக்கும் கல்வி இயக்கம் ந.க.எண். 2113 / பாடநூல் தயாரிப்பு / அகஇ / 2012, நாள்.29.10.2012.

விருதுநகர்,அக்.30. பள்ளிக்கு தாமதமாக வந்ததை தட்டி கேட்ட ஆசிரியர் ஒருவரை 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.

டி.இ.டி. தேர்வு முடிவுகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு.

சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்.

சென்னை: அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாவட்ட அளவிலான விழிப்பு குழு மற்றும் SC / ST பிரிவினருக்கு வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க மாநிலம் / மாவட்ட அளவிலான விழிப்பு குழு ஏற்படுத்துதல் சார்பு.

குடிநீர், கழிவறை, நூலக வசதிகள் உள்ளதா?: பள்ளிகளை கண்காணிக்க 5 பெண்கள் கொண்ட குழு- தமிழக அரசு உத்தரவு.

சென்னை, அக்.27-
 
பள்ளிக் கூடங்களில் மாணவ- மாணவிகள் எல்லாவித வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிக் கூடங்களை கண்காணிக்க 5 பெண்கள் கொண்ட குழுக்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அரசு பள்ளி ஆசிரியர்கள் "டியூசன்' நடத்த தடை:கல்வித்துறை இணை இயக்குனர் அதிரடி.


சேந்தமங்கலம்: பாடம் நடத்தாமல், வகுப்புக்கு டிமிக்கி கொடுத்த ஆசிரியர் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், விசாரணை நடத்திய, கல்வித்துறை இணை இயக்குனர் திரு. ராம்ராஜ், "ஆசிரியர்கள் யாரும், இனி டியூசன் எடுக்கக்கூடாது' என, உத்தரவிட்டார்.

T.E.T. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு.

27-10-2012.

சென்னை: டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு(SMC) கூட்டம் மாதம் ஒரு முறை கடைசி வாரம் நடத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 831 / அ2 / SMC / அகஇ / 2011, நாள். 09.2012.


தொடக்கக் கல்வி - மாநில கணக்காயர் தணிக்கை கூட்டமர்வு 15 மற்றும் 16.11.2012 அன்று நடத்துதல் சார்பு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 6019 / சி1 / 2012, நாள்.26.10.2012.


தொடக்கக் கல்வி - RIEST ஆங்கிலப் பயிற்சி - 02.11.2012 முதல் 30.11.2012 முடிய 30 நாட்களுக்கு 75 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்க உத்தரவு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 25981 / K2 / 2012, நாள். 25.10.2012.


கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்.

திருச்சி: போலியோவால் கால்கள் செயலிழந்த கல்லூரி மணவரை, அவரது நண்பர்கள் நாள்தோறும் வீல் சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சியில் நடக்கிறது.

தொடக்கக் கல்வி - விஜயதசமியையொட்டி 2012 அக்டோபர் மாதம் முழுவதுமாக சேர்க்கை மாதமாக அறிவித்து சிறப்பு நடவடிக்கை எடுத்து மாணவர்களை சேர்க்க இயக்குநர் உத்தரவு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 26156 / ஜே3 / 2012, நாள்.22.10.2012.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் காலகெடு அக்டோபர் 31 வரை நீடித்து தமிழக அரசு உத்தரவு.


மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை.

கோவை: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கனமழை எதிரொலி: சென்னையில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

சென்னை, அக்.19-
 
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மூன்று தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
   சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி-அனைத்து CEO/DEEOs கலந்து கொள்ளும் ஆய்வுகூட்டம் 22.10.2012 அன்று சென்னையில் பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களால் நடத்தவுள்ளது குறித்த இயக்குனரின் செயல்முறைகள்.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 20081 / ஜெ3 / 2012, நாள்.  18.10.2012.



கல்வித்துறையில் தகவல்

மேலாண்மை: டிசம்பரில் ஆன்லைன் முறை.

 தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.


பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்.

சென்னை: தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த, 2008- 09, 2009- 10, 2010- 11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது.
தொடக்ககல்வி - மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் தேவைப்பட்டியல் கோருதல். தொடக்ககல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்.ந.க.எண்.259611/கே 3/2012. நாள். 9.10.12.






தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் -போட்டோ எடுக்கும் இடங்கள் அறிவிப்பு.

திருச்சி: மாநகராட்சி பகுதியில், தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ, கைரே கை, கண் கருவிழிப்படலம் பதிவு செய்யும் பணி துவங்கும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிக்கை:திருச்சி மாநகராட்சியில் ஒன்று முதல், 60 வார்டுகளில் உள்ள, ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ, கைரேகை பதிவு மற்றும் கண் கருவிழிப்படலம் பதிவுக்கான சிறப்பு முகாம், இன்று துவங்கி, ஜனவரி, 15ம் தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக அக்., 15 முதல், 23ம் தேதி வரை தலா ஒரு வார்டில் இப்பணி நடக்கிறது.

தொடக்கக் கல்வி - மாநில கணக்காயர் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்வது குறித்து கூட்டமர்வு (JOINT SITTING MEETING) நடத்துதல் சார்பு.தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 6019 / சி1 / 2012, நாள். 12.10.2012.



11.10.2012 அன்று நடைபெற்ற மதுரை ஆய்வு கூட்டத்தில் தெரிவித்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய தொடக்கக் கல்வி இயக்குநரின் 30 ஆலோசனைகள்.


SPD. RC. NO. 2118 / A7 / SSA / 2012, DATED. 12.10.2012 SARVA SHIKSHA ABHIYAN - HANDWRITING SKILL TRAINING ON 21.11.2012 TO 28.11.2012 AT RAIPUR.

மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1946 / அகஇ / அ7 / 2012, நாள்.11.10.2012. அனைவருக்கும் கல்வி இயக்கம் - புதியதாக எளிமைப் படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் மற்றும் ஏணிப்படிகள் மாற்றங்கள் குறித்து இரு நாள் முன் ஆயுத்த கூட்டம் அனைத்து DPC / ADPCக்களுக்கு 30 & 31.10.2012 திருச்சியில் நடத்த உத்தரவு.


PLACE : SRIMATHI INDIRA GANDHI COLLEGE,
               CHATHIRAM BUS STAND, TRICHY

SCHOOL EDUCATION - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கோரி அவற்றை தர மறுத்தாலோ / தாமதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.தமிழக அரசின் கடித எண். 32388 / C2 / 2012, நாள்.05.10.2012 


DSE-தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் 2012 - 4,5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி விவரங்கள் 29.10.2012க்குள் நேரடியாக சமர்பிக்க இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
 ந.க.எண். 20066 / ஜே3 / 2012, நாள்.12.10.2012 

அண்ணாமலை பல்கலைக்கழக பட்டப் படிப்பு: அரசு புதிய உத்தரவு.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு குறித்து தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு முதுகலை ஆங்கிலம் மற்றும் தொடர்பியல் படிப்பானது, மற்ற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுகலை ஆங்கிலப் படிப்புக்கு இணையானதாகும்.
இந்தப் படிப்பை இணையானது என்று அறிவிக்கக் கோரும் கோரிக்கை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு வந்தது. அந்தத் துறையானது, தகுந்த உத்தரவினைப் பிறப்பிக்க உயர் கல்வித் துறையிடம் தெரிவித்தது. அதன்படி, இப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்:கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

மதுரை,: பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.

 மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
செய்தித்துறைக்கு தனி இணையதளம் துவக்கம்.


சென்னை: தமிழக செய்தி விளம்பரத்துறை தொடர்பான புதிய இணைய தளத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி ‌வைத்தார். தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்காக (டி.ஐ.பி.ஆர்) பிரத்யேக புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா இன்று நடந்தது. இதனை முதல்வர் ‌ஜெயலலிதா துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அரசின் செயல்பாடுகள், மற்றும் செய்திகள் மக்களிடம் விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இந்த இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.www.tndipr.gov.in என்ற பெயரில் இந்த இணையதளம் இன்று துவக்கப்பட்டுள்ளது.

தனி நபர் உரிமைக்கு பங்கம் வரக்கூடாது ;
R.T.I. ACT  குறித்து பிரதமர் கவலை.


டில்லி: நாட்டில் உள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் ( ரைட் டூ இன்பர்மேஷன் ) மூலம் தனி நபர் உரிமையை பாதிக்கும் அளவிற்கு பொதுமக்கள் நடந்து கொள்ளக்கூடாது என்றும் , இந்த சட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது என்றும் டில்லியில் நடந்த . மத்திய தகவல் கமிஷனின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். 


ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை.



சென்னை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற்ற மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, வெயிட்டேஜ் அடிப்படையில் கணக்கிட்டு, இனி பணி நியமனம் நடக்கும்.

Higher Education – Considering the P.G. Programme M.A. (English and Communication) Five Year Integrated awarded by Annamalai University as equivalent to M.A., (English) for the purpose of employment in public service – Resolution of the 34th Equivalence Committee– Orders - Issued.



சிம்கார்டு விற்பனை: அரசு புது உத்தரவு


கொடைக்கானல்: "ரேஷன் கார்டு நகலுடன், 2012ல், பொருட்கள் வாங்குவதற்கான இணைப்பு சீட்டு பதிவு நகலும் இருந்தால் மட்டுமே, சிம்கார்டு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
14-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு
முகாம் தேதி மாற்றம். 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழகத்தில் 2013ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம்தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டியலில் பெயர் சேர்த்தல், நிக்கல் உள்ளிட்ட திருத்தங்களை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.


பள்ளிக்கல்வித்துறை - EMIS - மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடத்தி படிவம் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு.



6 - மாத காலத்திற்குள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பள்ளிகளிலும்  6 முதல் 14 வயது பிள்ளைகளுக்கான கழிப்பறை வசதி ( IN PARTICULAR GIRLS TOILET) உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநருக்கு செயலர் உத்தரவு.



தொடக்கக் கல்வி - TPF மற்றும் CPS சார்ந்த அனைத்து விவரங்களும் சரி செய்து 28.02.2013-க்குள் தணிக்கை மேற்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உத்தரவு.


FREE SPOKEN ENGLISH COACHING FOR THOSE STUDENTS STUDYING IN BC / MBC HOSTELS IN TAMILNADU. HON'BLE CHIEF MINISTER ORDER.

CLICK HERE FO DOWNLOAD THE PRESS RELEASE

தகவல் அறியும் உரிமைச்சட்டம் - SGTT முடித்திருந்தால் மீண்டும் +2 படிக்க அவசியமில்லை மற்றும் பதவி உயர்வுக்கும் தகுதியுண்டு.


தொடக்கக் கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களை 08.10.12 அன்று "Joy of Giving Week" கொண்டாடுதல் குறித்து அறிவுரை வழங்கி தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.

இயக்குனர் அவர்களின் செ.மு. ந.க.எண். 24412 / ஜே3/ 2012, 

நாள். 04.10.2012  


தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் -அனைத்து வகை பள்ளிகள் சார்பாக தொடரப்பட்ட வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக ஆய்வு கூட்டம். 16.10.2012 மற்றும் 17.10.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது. அப்போது வழக்கு சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்து நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், மற்றும் ஒரு பிரிவு உதவியாளர் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என தொடக்ககல்விஇயக்குனர் தெரிவித்துள்ளார். 


இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 10239 / ஜி1/ 2012, நாள். 04.10.2012 
பாளையில் பள்ளி வாகனத்தின் கதவு திறந்ததால் நடுரோட்டில் விழுந்த பிளஸ்-1 மாணவி படுகாயம்.

நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் கிறிஸ்தவ போதகர். இவரது மகள் அக்ஷாய் இவாஞ்சல் (16). இவர் பாளை ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பள்ளிக்கு சொந்தமான வாகனத்திலேயே தினமும் பள்ளி சென்று வந்தார். இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது. 

மாணவி அக்ஷாய் இவாஞ்சல் இன்று காலை பள்ளி வாகனத்தில் சென்றார். அவர் வந்த வாகனத்தில் அளவுக்கு அதிகமாக மாணவிகள் பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகள் வந்த பள்ளி வாகனம் பாளை வண்ணார்பேட்டை பகுதியில் காலை 8 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளி வாகனத்தின் கதவு திடீரென திறந்தது. 
இதில் மாணவி அக்ஷாய் இவாஞ்சல் ஓடும் வாகனத்தில் இருந்து நடுரோட்டில் விழுந்தார்.

திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்களால் இரத்து செய்து தொடக்க கல்வி  இயக்குனர் அவர்கள் உத்தரவு.

பள்ளிகளில் அடிப்படை வசதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு


புதுடில்லி : பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 6 மாத காலத்திற்குள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வந்தபோது சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவினை பிறப்பித்தது. 

ஆபிரகாம் லிங்கனின் தன்னம்பிக்கை 

அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் நாம் அனைவரும் சொர்க்கம் செல்பதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். என்று போதனை செய்தார். அவர்தன் உரையை முடித்தவுடன் யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர். ஒரு ஏழை சிறுவனைத்தவிர.
உடனே அந்த பாதிரியார் அந்த சிறுவனிடம் தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? நரகம் தொன் செல்ல விரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் சொர்க்கத்தையும் விரும்பவில்லை. நரகத்தையிம் விரும்பவில்லை. நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்றான். உடனே கோபம் கொண்ட அந்த பாதிரியார் இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா என்று கூறினார். அந்த சிறுவனோ அமைதியாக இங்கே கறுப்பு இன மக்கனை நாயைவிட கேவலமாக கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியான இருக்கும் என்று கூறினான். அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான்.
அந்த சிறுவன் தான் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான லிங்கனின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். அவரை போன்று ஒவ்வொரு மாணவர்களும் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

தொடக்கக் கல்வி - சர்வதேச அளவில் பதக்கம் பெறும் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - அக்டோபர் முதல் வாரத்தில் ஏதேனும் ஒரு தேதியில் ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நடத்த உத்தரவு.

மாணவர்கள் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கேற்ற
குழு விளையாட்டு / தனிநபர் போட்டிகளில் அவர்களுடைய 
திறனை அறிந்து மேம்படுத்திட போட்டிகளும், அக்டோபர் 
முதல் வாரத்தில் ஏதேனும் ஒரு தேதியில் ஒரு நாள் பயிற்சி
வகுப்பினை நடத்தவும் தொடக்ககல்வி இயக்குனர்
 அவர்கள்  உத்தரவு.

October 2, 2012


His Excellency the Governor and Honble Chief Minister paid floral tributes to Mahatma Gandhi on his 144th birthday

Press Release