ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள். எங்கே செல்கிறது நமது கலாச்சாரம்?
கற்றுகொடுப்பது என்பதும் ஒரு கலையே. கற்றவர்கள்
எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கும் மனப்பக்குவம் வருவதில்லை. மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கவேண்டும் என்ற மனப்பக்குவம் உள்ளவர்கள் கல்விப்பணியை தேர்வு செய்கின்றனர். இப்பக்குவம் இல்லாதவர்கள் ஆசிரியர் பயிற்சியின் போது இந்த மனப்பக்குவத்தை பெற்று கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் ஆசிரியர்களால் மாணவர்கள், தண்டனை என்ற பெயரில் விரும்பத்தகாத நிலையில் தண்டிக்கப்பட்ட நிகழ்வுகளை மறுப்பதற்கில்லை. இவ்வாறான தண்டனைகளிலிருந்து மாணவர்களை நிச்சயம் பாதுகாக்கவேண்டும்.
தற்போது கல்விக்காக, மாணவர்களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்களில் ஆசிரியர் மாணவர்களிடம் கண்டிப்பை காட்ட முடியாது, கூடாது.
அன்பினால் எல்லாவற்றையும் செய்ய முடியும். சில நேரங்களில் கண்டிப்பு தேவைப்படத்தானே செய்கிறது. இன்று கண்டிக்க வழியில்லாததால், மாணவர்கள் ஆசிரியர்களை தண்டிக்க தொடங்கிவிட்டனர். ஆசிரியர்களின் பாதுகாப்புக்காக யாரும் கவலைப்படாவிட்டாலும் வருத்தம் இல்லை. இன்றைய மாணவர்களின் நாளைய எதிர்காலம் இப்படியே போனால் என்னவாகும்?
இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக சட்டங்கள் உள்ளன.மாணவர்களை நியாயமான கண்டிப்புடன் ஆசிரியர் நடந்துகொள்ள அவசியம் சட்டம் தேவை. மருந்து கசக்கத்தான் செய்யும். கண்டிப்பும் அப்படியே இருக்கலாம். பேருந்துக்கு BRAKE அவசியம் தேவை. மாணவர்களுக்கு ஆசிரியரின் கண்டிப்பு தேவை. இன்றைக்கு பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியரைப் பார்த்து மாணவன் சொல்கிறான், சார், மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு ஜெயிலாம், என்று. வார்த்தையால் கண்டிக்கவே வழியில்லாத போது எங்கே அடிக்க?
வேண்டவே வேண்டாம் - ஆசிரியர்களுக்கு மாணவர்களை எந்தவிதத்திலும் அடிக்கிற உரிமை. ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க நியாயமான முறையில் கண்டிக்க உரிமை வேண்டாமா?
இன்றைய நிலையில் ஆசிரியர்களின் நிலைமை - தாக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள். இந்த கலாச்சாரம் எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை.
ஆற்றுக்கு அணை அவசியம். குதிரைக்கு கடிவாளம் அவசியம். பேருந்துக்கு பிரேக் அவசியம். மாணவனுக்கு ஆசிரியரின் கண்டிப்பு அவசியம். தண்டனை வேறு. கண்டிப்பு வேறு. பிரம்பை கையாடாதவன் தன் மகனை பகைக்கிறான் என்று பைபளில் கூறப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக எண்ணியே ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனனர். இன்றைக்கு பிரம்பு வேண்டாம். மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்க்கு அனுமதி வேண்டும். எதிர்கால மாணவர்களின் வாழ்வு சிறக்க வழி பிறக்க வேண்டும்.
மாணவர்களால் ஆசிரியர்கள் கத்தியால் குத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இப்படியே போனால் நாளைய எதிர்காலம் எங்கே போகும்?
வெயிலின் வெப்பம் சுடுகிறது என்பதற்காக வெயிலே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா? ......................................................................................
............................................................................................................................................................
.....................................................................................................................................................

No comments:
Post a Comment