சிறுபான்மை பள்ளிகளுக்கு அரசு நிதிஉதவி. விண்ணப்பிக்க அழைப்பு.

                          அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் பயிலரங்கம் திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் நேற்று 31.10.2012 நடந்தது.



     இதில் மாநிலத் திட்ட இயக்குனர் திரு.முகமது அஸ்லம் அவர்கள் பேசுகையில், சிறுபான்மையினர் பள்ளிகளைத் தரம் உயர்த்தும் வகையில், மத்திய அரசின் சார்பில் சிறுபான்மையினர் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி அப்பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறை மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை மேம்படுத்தவும், பிற உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நிதிஉதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் அனைத்து சிறுபான்மையினர் பள்ளிகள் நிதிஉதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.50 லட்சம் வரை நிதிஉதவி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. எனவே திருச்சி மாவட்டப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் நிதிஉதவி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

     மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.செல்வகுமார், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திரு. ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகளின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment