விருதுநகர்,அக்.30. பள்ளிக்கு தாமதமாக வந்ததை தட்டி கேட்ட ஆசிரியர் ஒருவரை 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.
விருதுநகரில் கே.வி.எஸ் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் அஜீத் குமார், இவர் நேற்று பள்ளிக்கு தாமதமாக வந்ததால் கணித ஆசிரியர் பாண்டியராஜன் என்பவர் அந்த மாணவரை பள்ளியில் வெளியே நிற்க வைத்திருக்கிறார்.
இன்றும் அதேபோல அந்த மாணவர் மீண்டும் தாமதமாக பள்ளிக்கு வர, இன்றும் அவரை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துள்ளார் பாண்டியராஜன், இந்த நிலையில் அந்த மாணவர் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
காயமடைந்த ஆசிரியர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
இந்த பிரச்சனையால் விருது நகரில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment