தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் -போட்டோ எடுக்கும் இடங்கள் அறிவிப்பு.

திருச்சி: மாநகராட்சி பகுதியில், தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ, கைரே கை, கண் கருவிழிப்படலம் பதிவு செய்யும் பணி துவங்கும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிக்கை:திருச்சி மாநகராட்சியில் ஒன்று முதல், 60 வார்டுகளில் உள்ள, ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ, கைரேகை பதிவு மற்றும் கண் கருவிழிப்படலம் பதிவுக்கான சிறப்பு முகாம், இன்று துவங்கி, ஜனவரி, 15ம் தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக அக்., 15 முதல், 23ம் தேதி வரை தலா ஒரு வார்டில் இப்பணி நடக்கிறது.
அதன்படி, ஸ்ரீரங்கம் கோட்டம், ஒன்றாவது வார்டுக்குப்பட்ட தெப்பக்குளம் தெரு (1, 2, 3), மேல்கரை, தென்கரை, ராமகிருஷ்ணா அப்பார்ட்மென்ட், வடக்கு வாசல் ரோடு, தெற்கு சித்திரை வீதி, மேல சித்திரை வீதி, மேல உத்திர வீதி, தெற்கு வாசல் கடை வீதி, தெற்குசித்திரை வீதி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, காஞ்சியம்மன் நடுநிலைப்பள்ளி, மாநகராட்சி துவக்கபள்ளியில் ஃபோட்டோ எடுக்கப்படுகிறது.அரியமங்கலம் கோட்டம், 33வது வார்டுக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் மெயின்ரோடு, பாத்திமா, அய்யப்பன், அபிர்தா ஆசாரி, செங்குட்டுவன், காந்தி, கலைவாணர், தெரசம்மாள், நேரு, பெரியார், நாகம்மை, லூர்து மாதா கோவில், நாவலர் நெடுஞ்செழியன், ஜீவா, ஜாகீர் உசேன், பிள்ளையார் கோவில், ராஜாமணி, கலைஞர் கருணாநிதி ஆகிய தெருக்கள், சுப்பையா விஸ்தரிப்பு, எம்.ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சங்கிலியாண்டபுரம் செவன் டாலர்ஸ் பள்ளியில் ஃபோட்டோ எடுக்கப்படும்.பொன்மலை கோட்டம், 44வது வார்டுக்குட்பட்ட அலெக்சாண்டியா, பென்வெல்ஸ், பேர்ட்ஸ், ஹீபர் (கோர்ட் வளாகம்), ஹீபர், பழைய போஸ்ட் ஆஃபீஸ் ஆகிய ரோடுகள், பாரதியார் சாலை, ஆணைக்கட்டி மைதானத்தை சேர்ந்தவர்களுக்கு, பீமநகர் செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேவாசங்கம் பெண்கள் பள்ளியில் ஃபோட்டோ எடுக்கப்படும்.கோ.அபிஷேகபுரம் கோட்டம், 52வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.,நகர், அருணாநகர், தேரடி நகர், அல்லித்துறை ரோடு ஆகிய பகுதியைச் சேர்ந்தவருக்கு பிஷப் ஹீபர் கல்லூரியில் ஃபோட்டோ எடுக்கப்படும்.காலை, 9.30 மணி முதல், மாலை, 6 மணி வரை, நேரில் சென்று ஃபோட்டோ எடுத்து, கைவிரல்ரேகை, கண் கருவிழிப்படலம் பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment