பொங்கல், மிலாதுநபி, குடியரசு தினம்: இந்த மாதம் 13 நாள் அரசு விடுமுறை.

சென்னை, ஜன. 1-
 
தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மட்டும் 13 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
 
இந்த புத்தாண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் தொடங்கி உள்ளது. நிறைய திருவிழாக்களை உள்ளடக்கிய இந்த ஜனவரி மாதத்தில் அவர்களுக்கு 13 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
 
புது வருடப் பிறப்பான ஜனவரி முதல் நாளே விடுமுறைதான். பொங்கல் விடுமுறை வருகிற 14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மாத கடைசி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணிக்காலமாக இருக்கும். ஏனென்றால் ஜனவரி 25-ல் மிலாதுநபி விடுமுறையும் 26-ந்தேதி குடியரசு தின விடுமுறையும் வருகிறது.
 
அந்த வாரத்தில் கடைசி நாளான ஞாயிறும் விடுமுறைதான்.
 
13 விடுமுறை நாட்கள் விவரம்:-
 
1. புத்தாண்டு தினம். 5. சனி விடுமுறை 6. ஞாயிறு விடுமுறை 12. சனி விடுமுறை 13. ஞாயிறு விடுமுறை. 14. பொங்கல் 15. திருவள்ளுவர் தினம் 16, மாட்டுப்பொங்கல். 19. சனி விடுமுறை. 20. ஞாயிறு விடுமுறை. 25. மிலாது நபி. 26. குடியரசு தினம். 27 ஞாயிறு விடுமுறை.
 
விருப்பமுள்ள ஊழியர்கள் 17, 18-ந்தேதிகளில் விடுமுறை எடுத்தால் 19, 20-ந்தேதி வரையும் விடுமுறை கிடைக்கும்.

No comments:

Post a Comment