துடைப்பத்தால் தாக்கியதில் மாணவரின் கண் பாதிப்பு.
மதுரை : மதுரை அருகே பள்ளியில், மாணவர் ஒருவர் துடைப்பத்தால் தாக்கியதில், மற்றொரு மாணவரின் கண் பாதித்தது. தாக்குவதற்கு தூண்டியதாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், கலெக்டரிடம் நேற்று புகார் அளித்தனர்.
மதுரை எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கப்பழம் கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் அளித்த புகார்:
சீல்நாயக்கன்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் எனது மகன் கஜேந்திரன் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். டிச.,17ல், பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். அப்போது கஜேந்திரன் பங்கேற்காததால், அவரை தண்டிக்கும்படி ஆசிரியர் பாக்கியலட்சுமி, இன்னொரு மாணவரிடம் கூறினார். அந்த மாணவன் வைத்திருந்த துடைப்பத்தால் தாக்கியதில், கஜேந்திரனின் கண் பாதித்தது. தலைமையாசிரியர் அமுதா, ஆசிரியர் பாக்கியலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புகாரில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற கலெக்டர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாணவர் மற்றும் பெற்றோர், கலெக்டர் கார் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment