மே 12-ல் தமிழ் அமைப்புகள் உண்ணாவிரதம்.

இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்தும், அது குறித்து சர்வதேச சுயேச்சையான விசாரணைக் குழுவை ஐ.நா. அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் மே 12-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும்.

இன்று முதல் ரயில் பயணக் கட்டணம் 


உயர்வு                                


பயணச் சீட்டு முன்பதிவு மற்றும் சரக்கு கட்டண அதிகரிப்பு திங்கள்கிழமை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது.
இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி பயணக் கட்டணத்தில் மாற்றமில்லை. சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி பயணக் கட்டணம் ரூ. 10 உயரும். ஏசி வகுப்பு பயணக் கட்டணம் ரூ.15 முதல் ரூ. 25 வரை உயரும்.
   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்   
       செல்வி ஜெ. ஜெயலலிதா 
           அவர்களின் ஈஸ்டர்  திருநாள்  
             வாழ்த்துச் செய்தி.


பழைய சிடிக்களில் உருவாக்கலாம் போட்டோ பிரேம்.


பழைய சிடிக்களை என்ன செய்வது குப்பையில் தான் தூக்கிப் போட வேண்டும் என்று நினைத்தீர்களா... இல்லை. பழைய சிடிக்களில் நிறைய உபயோகமான பொருட்களை செய்யலாம். அதில் ஒன்றுதான் போட்டோ பிரேம்.

கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி.

கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடுகளை எய்துவது குறிப்பாக மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவுகளில் மிகச் சிறப்பாகக் கருதப்படும் மாநிலங்களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதியமைச்சர் சமர்ப்பித்த நடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு. AGAE - PAY FIXATION UNDER RULE 4(3) - ELEMENTARY HM HAS BEEN BENEFITED THAN MIDDLE SCHOOL HM - ELE HM SELECTION GRADE HAS BEEN FIXED FOR MIDDLE HM AS PER 4(3) RULE REG - ORDER.



அரசு ஊழியர்களின் சம்பள பிரச்சனை - எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - நாளிதழ் செய்தி வெளியீடு.


CCEக்கு மாதிரி வகுப்பறை அமைத்து அசத்தும் அரசுப் பள்ளி


கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பல்வேறு புதுமைகளைப் புகுத்தி மாணவர்களை முன்னேற்றுவதில் முழுமூச்சாய் இயங்கிக் கொண்டுவருகிறது.

பள்ளிக்கல்வி - அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல் படுத்த தமிழக அரசு உத்தரவு.G.O..33 SCHOOL EDUCATION DEPARTMENT, DATED.07.03.2013 - TO IMPLEMENT SUPREME COURT ORDER FOR DRINKING WATER & SANITATION FACILITIES IN AIDED SCHOOLS REG.

 CLICK HERE..

Results of Departmental Examinations - DECEMBER 2012

Results of Departmental Examinations - DECEMBER 2012
(Updated on 25 Mar 2013)
Enter Your Register Number :                                                         
தமிழகத்தில் தமிழ் மொழிப்பள்ளிகள் மட்டுமல்லாமல் பிற மொழிப்பள்ளிகளும் உள்ளன. அதில் சில இருமொழி பள்ளிகளாகவும் உள்ளன. பிற மொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து கோரப்பட்ட தகவல்களுக்கு வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கிய தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் நகல்களை உங்களுக்காக வெளியிடுகிறோம். உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள். உறங்கிக் கொண்டிருந்ததால் உங்களுக்கு கிடைக்காது பதவி உயர்வு. ( நிரவல் தான் வரும் ) விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். மற்றவர்களையும் விழிப்படையைச் செய்யுங்கள். உங்களின் சேவையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம். (T.A.T.A.)

SASTRA B.Ed., படித்தவர்களுக்கு தேர்வுக்கு அடுத்த நாளில் இருந்து ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். சாஸ்த்ரா பல்கலையில் படித்த ஆசிரியர்களின் பல்வேறு முயற்சிகளின் பயன் என்றால் மிகையாகாது. இன்று பலர் என்னென்னவோ சொல்கிறார்கள். யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் திருச்சி மாவட்டத்திலிருந்து மாநில துணை பொதுசெயலாளர் சார்பில் மதிப்புமிகு தொடக்க கல்வி  துணை இயக்குனர் அவர்களுக்கு 03.03.2012 இல்  அனுப்பிய கடித நகலை உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம். தொடர்ந்து ஆசிரியர் சமுதாய நலனுக்காக செயல்படுவோம்.




தொடக்கக் கல்வி - தஞ்சாவூர் சாஸ்தரா பல்கலைக்கழகத் தால் DDE மூலம் வழங்கப்படும் பி.எட்., பட்டத்திற்கு ஊக்க ஊதிய உயர்வுகள் பெற இயக்குநர் உத்தரவு. DEE - DEE ORDERED TO ALL DEEOS FOR ISSUE OF INCENTIVES FOR SASTRA UNIVERSITY B.Ed., CANDIDATES REG -

 PROC CLICK HERE...


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. GO.(1D).NO.57 SCHOOL EDUCATION (A1) DEPT, DATED.05.03.2013 

CLICK HERE.


கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.

டெல்லி: கல்வித் துறைகளில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு வேலைவாய்ப்புகளை, இணையதளம் வழியாக பெறுவதற்கு, யு.ஜி.சி., ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென, தனி இணையதளத்தை துவக்கி உள்ளது.
 தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க திருச்சி மருங்காபுரி கிளை தொடக்க விழா 21.3.2013 இல் கோவில்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது.

மாநில மற்றும் மாவட்ட அமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள்.













இன்று தமிழக பட்ஜெட்.

பட்ஜெட் கூட்டத்தொடரில்  இடைநிலை ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை குறித்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமலர் செய்தியினை உங்களுக்காக வெளியிடுகிறோம்.. நன்றி : தினமலர்.


பள்ளிகல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது : துறைக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சம்பள பிரச்சனை குறித்தும் கூட்டத்தொடரில் அறிவிப்பு இருக்கும். 

                  என பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(T.A.T.A.)  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைந்திட அரசுக்கு வைத்த கோரிக்கை விவரங்கள் அனைத்தும் ஆசிரியர் சமுதாயம் அறிந்த ஒன்றாகும்.

மாண்புமிகு அம்மா அவர்கள் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்திடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் காத்திருக்கிறது.
      தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் 
                   சங்கம் (T.A.T.A.)
திருச்சி மாவட்டம் மருங்காபுரி கிளை   
                   துவக்கவிழா 

நாள் : 21.03.2013.

இடம் : கோவில்பட்டி (மருங்காபுரி)

அனைவரையும் வருக வருக என  
    அன்புடன் வரவேற்கிறோம்.

கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!...

நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை புரிந்துகொள்பவரே புத்திசாலி.


சத்துணவு மாணவர்களுக்கு 13 வகை உணவுகள் இன்று தமிழ்நாட்டில் உள்ள 32 வட்டாரங்களில் அமல்படுத்தப்பட்டது.
சென்னை, மார்ச். 20-
தமிழ்நாட்டில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் மற்றும் 
அங்கன்வாடி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 
அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் 13 வகையான
 உணவையும், 4 வகை முட்டை மசாலாக்களும்
 வழங்கப்படும் என மாண்புமிகு  முதல்-அமைச்சர்
 ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.


இந்த திட்டம் இன்று தமிழ்நாட்டில் உள்ள 32 
வட்டாரங்களில் அமல்படுத்தப்பட்டது. நுங்கம்பாக்கம்
 மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் வளர்மதி மாணவர்களுக்கு
 உணவு வழங்கினார்.

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை.

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்: பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை.

விருதுநகர்: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு அரசால், 15 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 2013 - 14ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த உத்தரவு.


6 முதல் 9-ம் வகுப்பு வரை ஒரே நேரத்தில் முழு ஆண்டு தேர்வு.

சென்னை, மார்ச்.17 - 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முழு ஆண்டுத்தேர்வு 3-ந்தேதி தொடங்குகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தேர்வு தொடங்கி முடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய முறை: ஆங்கிலத் திறனுக்கு அவசியம் இருக்காது.


புதுடில்லி: அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் புதிய முறையை பின்பற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதன்மை தேர்வில் ஆங்கிலத் திறன் அவசியம் இல்லை; அந்த மதிப்பெண், இறுதித் தேர்வில் சேர்க்கப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்படுகிறது.
அறிந்துகொள்வோம்.

எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங், ஹில்லரி: இமயமலையில் உள்ள 29,118 அடி உயர சிகரம் எவரெஸ்ட்.


எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங், ஹில்லரி: இமயமலையில் உள்ள 29,118 அடி உயர சிகரம் எவரெஸ்ட்

இமய மலையை அளவிடும் பணியைச் செய்த இங்கிலாந்து `சர்வே, நிபுணர் ஜார்ஜ் எவரெஸ்ட் நினைவாக, சிகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. பனியால் உறைந்த இமய மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தவர்கள் பலர். அவர்களில் பெரும்பாலோர் நடுவழியிலேயே திரும்பினார்கள். மீதி பேர், குளிர் தாங்காமல் இறந்து போனார்கள். 

இச்சிகரத்தை மனிதன் வெற்றி கொண்ட நிகழ்ச்சி, 1953-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி நிகழ்ந்தது. இச்சாதனையை நிகழ்த்தியவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் (வயது 39) மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லரி (வயது 34). டென்சிங் 1914 மே மாதம் நேபாளத்தில் பிறந்தவர். 

கல்வி உதவித்தொகை தாமதம் கலெக்டரிடம் மாணவர் புகார்.

தஞ்சாவூர்: கல்வி உதவித்தொகை வழங்கக்கேட்டு, வேளாண்மை கல்வி நிலைய மாணவ, மாணவியர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தஞ்சை அருகேயுள்ள காட்டுத்தோட்டத்தில்

வரும் கல்வியாண்டில் 26 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள்.

சென்னை: "கல்வியில் பின் தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், வரும் கல்வியாண்டு முதல், மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும்" என, மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சத்துணவு மையங்களுக்கு மிக்சி: முதல்வர் உத்தரவு.

சத்துணவு மையங்கள், குழந்தை நல மையங்களுக்கு புதிய வகை உணவுகளைத் தயாரிக்க வசதியாக மிக்ஸி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று வெளியிட்ட அரசின் செய்திக் குறிப்பில்,
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பதற்காக பள்ளிகளில் சத்துணவு திட்டம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (T.A.T.A)பொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர்  அவர்களின் தனிபிரிவுக்கு,  ஊதிய முரண்பாடுகள் களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை (ஊதிய குறைதீர்க்கும் பிரிவு) அனுப்பியுள்ள பதில் கடிதம் உங்களின் பார்வைக்கு வெளியிடப்படுகிறது.

 இது சுய விளம்பரத்திற்காக வெளியிடப்படவில்லை. நமது T.A.T.A. சங்கம் இடைநிலை ஆசிரியர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிடுகிறோம். 






யு.பி.எஸ்.சி. தேர்வில் புதிய விதிமுறை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு.


புதுடெல்லி, மார்ச் 15-

யு.பி.எஸ்.சி. தேர்வு முறையில் புதிய விதிமுறைகைள மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததாலும், பிராந்திய மொழிகளில் இத்தேர்வுகளை எழுத பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாலும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இப்பிரச்சினை இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது


தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.


ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய கட்டுப்பாடு: முதல்வர் எதிர்ப்பு.


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

R.T.I. - பொருளாதாரம் பட்டம் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி இல்லை - TRB விளக்கம்.




கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவு.

மதுரை: "தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து, ஒளி-ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மாற்றம்.

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் வி.ஏ.ஓ., குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., தேர்வில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்படடுள்ளது.

தொடக்கக் கல்வி - சிறப்பு வருங்கால வைப்பு நிதி - நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு பங்குத் தொகை மற்றும் வட்டி தொகை 2012 -13ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு.



தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2012-13ம் கல்வியாண்டில் AEEO/AAEEO பணிமாறுதல் மூலம் நியமன ம் - AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு.


12.3.2013 அன்று TESO அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் - பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு.


முதல்வர் விருது: வீரர்கள், பயிற்சியாளருக்கு அழைப்பு.

புதுக்கோட்டை: முதல்வர் விருது பெற விரும்பும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்கள், 2 பேர், வீராங்கனைகள், இரண்டு பேருக்கு, அரசு சார்பில் முதல்வர் விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியுடைய நபர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இவ்விருது பெற விரும்புவோர், தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, தனிநபர் போட்டிகளில், முதல், மூன்று இடங்களில் வெற்றி பெற்று, பதக்கம் பெற்றிருத்தல் வேண்டும்.

தொடக்கக் கல்வி - 2010 - 11ஆம் ஆண்டு தரம் உயர்த்தப் பட்ட 218 நடுநிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான பதவி உயர்வு கலந்தாய்வு 09.03.2013 அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும்.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 01848 / டி1 / 2012, நாள். 08.03.2013.



வேலை வாங்கித்தருவதாக கூறி இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களிடம் பணம் பறிக்க முயற்சி 2 பேர் கைது.

சென்னை
வேலை வாங்கித்தருவதாக கூறி இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களிடம் பணம் பறிக்க முயன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் 12ம் தேதியுடன் விடை பெறுகிறார்! புதிய தலைவர் நவநீத கிருஷ்ணன்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், 12ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய தலைவராக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 
தாமத அதிகாரிகளுக்கு அபராதம்:அரசு.

புதுடில்லி : ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், பென்ஷன், பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளை தாமதப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250 லிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரை அபராதம் விதிக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
மார்ச் - 8 சர்வதேச மகளிர் தினம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வாழ்த்து.

வாழ்த்து செய்தியினை அறிந்திட CLICK செய்யவும்.
மார்ச் -21 ல் தமிழக பட்ஜெட்.


சென்னை: 2013 - 2014 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் 21 ல் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 ம் தேதி துவங்கும் சட்டசபை கூட்டத்தொடர் முதல்நாளிலேயே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

காலை 10. 30 மணியளவில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், இத்தகவலை சட்டசபை அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGNOU - B.ED ASSIGNMENTS 2013 - DOWNLOAD

                        English

                              1st Year (January 2013)

                              2nd Year (January 2013)

                  2nd Year (BESE 065 & BESE 066)-2013


காமராசர் பல்கலை: பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி.


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management) and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள் B.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு உத்தரவு.


IGNOU GENUINENESS APPLICATION FORMAT.

தற்போது IGNOU  இரண்டாமாண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு PROVISIONAL CERTIFICATE, GRADE CARD வந்து கொண்டுள்ளது. வந்தவுடன் GENUINENESS CERTIFICATE பெற விண்ணப்பிக்கவேண்டும். அதற்கான மாதிரி விண்ணப்பம் வெளியிட்டுள்ளோம். WORD இல் உள்ளதை  EDIT பண்ணி பயன்படுத்திகொள்ளுங்கள். நண்பர்களுக்கு உதவுங்கள்.

வேக வைக்காமல் தண்ணீரில் ஊற வைத்தாலே சாதமாகும் புதிய ரக அரிசி: அசாம் வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

அசாம் மாநிலம் கட்டாக்கில் மத்திய நெல் பரிசோதனை ஆராய்ச்சி கூடம் உள்ளது. இங்குள்ள விஞ்ஞானிகள் அகோனி, பெகாலி, நல்வோரா ஆகிய 3 புதிய நெல் ரகத்தை கண்டு பிடித்துள்ளனர். இதில் நல்வோரா என்ற ரக நெல்லில் கிடைக்கும் அரிசினை வேக வைக்க வேண்டாம். நல்ல தண்ணீரில் சமார் 45 நிமிடம் ஊற வைத்தாலே சாதமாக மாறிவிடும். இதற்காக சுடு தண்ணீர்கூட பயன்படுத்த தேவையில்லை. 

மாணவர்கள் தீவிரவாத பாதையில் செல்வதை தடுக்க அறிவியல், தொழில்நுட்பக்கல்வி படிப்பில் கலை, சமூகவியல் பாடங்கள் கட்டாயம். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. அதிரடி உத்தரவு.

சென்னை. Mar. 2.
மாணவர்கள் தீவிரவாத பாதையில் செல்வதை தடுக்கும் வகையில், கல்லூரிகளில் அறிவியல், தொழில்நுட்பக்கல்வி படிப்புகளில் கலை, இலக்கியம், சமூகவியல் பாடங்களை கட்டாயமாக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - 2012-13ம் ஆண்டு - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான (பணிமாறுதல்) கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 8.3.2013 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் என அறிவிப்பு.