டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மாற்றம்.

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் வி.ஏ.ஓ., குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., தேர்வில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்படடுள்ளது.
குரூப் 2 தேர்வில் பொது அறிவுப்பகுதிக்கு அனைத்து மார்க்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் பொது அறிவு பாடத்திற்கு 100 கேள்விகளும், பொது தமிழ் பாடத்திற்கு 100 கேள்விகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாடதிட்டங்கள் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை பகுதியில் 150 கேள்விகளும், இதற்காக 225 மார்க்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 கேள்விகள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். இதில் 75 மார்க்குகள் ஒதுக்கப்படம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment