முதல்வர் விருது: வீரர்கள், பயிற்சியாளருக்கு அழைப்பு.

புதுக்கோட்டை: முதல்வர் விருது பெற விரும்பும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்கள், 2 பேர், வீராங்கனைகள், இரண்டு பேருக்கு, அரசு சார்பில் முதல்வர் விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியுடைய நபர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இவ்விருது பெற விரும்புவோர், தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, தனிநபர் போட்டிகளில், முதல், மூன்று இடங்களில் வெற்றி பெற்று, பதக்கம் பெற்றிருத்தல் வேண்டும்.

குழு போட்டிகளில், முதல் மற்றும், இரண்டாம் இடத்தில் வெற்றிபெற்று பதக்கம் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
இதுபோன்று தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதியுடைய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கிய, விளையாட்டு பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பட்டயத்துடன் கூடிய, முதல்வர் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது பெற விரும்பும் பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், தமிழகத்தில் தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள் வசிப்பவராகவும், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்து, பதக்கம் பெறும் விதமாக தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் பயிற்சி அளித்து வருபவர்களாக இருத்தல் வேண்டும்.
தகுதியுடைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் மூலம், வரும், 15ம் தேதிக்குள் "உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ.பெரியார் நெடுஞ்சாலை நேரு பூங்கா, சென்னை-84" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தொடர்புடைய மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் பரிந்துரை பெற்று, இம்மாதம், 30ம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.

No comments:

Post a Comment