AEEO ASSOCIATION MET ELEMENTARY DIRECTOR TO DISCUSS ABOUT G.O. NO. 179 IMPLEMENTATION.


                 உதவித்  தொடக்கக்  கல்வி அலுவலர் சங்கம் 

13/11/2013 அன்று முற்பகல் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை உதவித்  தொடக்கக் கல்வி அலுவலர் சங்க கெளரவத் தலைவர் திரு.அ.சுந்தரராஜன் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.ச.செளந்தரராசன் மாநிலப் பொருளாளர் திரு. அ.ஆரோக்கியம் மாநிலத் தலைமை நிலையச் செயலர் திரு.இரா.கணேசன்   சாக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ஜெயக்குமார் ஆகியோர்  சந்தித்தனர் . அப்பொழுது அரசானை 179  ஐச் செயல் படுத்துவது சார்பாக எழுந்துள்ள இடர்பாடுகள் பற்றி இயக்குனர் அவர்களிடம் விவாதித்தனர். மேலும் இது தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது கோரிக்கை விவரம் .




இது தொடர்பாக மேற்கொள்ளப் பட வேண்டிய நடவடிக்கைகள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் உடன் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார் .தொடக்கக் கல்வி இயக்குனர் அறையில் சுமார் 1 மணி நேரம் இந்த கோரிக்கை சார்பாக கடலூர் மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர் ஆகியோருடன் விவாதித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டது . அப்போது உதவித்  தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணிகளின் சட்டப்படியான பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டது . முடிவுகளை இயக்குனர் அவர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உடன் தெரிவிப்பதாகக் கூறினார் . அதே நேரத்தில் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் இயக்குனர் அவர்களை சந்திக்க வந்த போது  உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் செயல் பாடுகளைப் பார்த்து ஒரு சில பொறுப்பாளர்கள் இக் கோரிக்கை நியாயத்தை கேட்டுப் புரிந்துகொண்டனர் . இயக்குனர் அவர்களுக்கு உதவித்  தொடக்கக்  கல்வி அலுவலர் சங்கம் நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறது.      

No comments:

Post a Comment