நீதிபதிகளை மைலார்ட் என அழைக்கலாமா: சுப்ரீம் கோர்ட் விளக்கம்.


புதுடில்லி : கோர்ட்டுகளில் நீதிபதியை மைலார்ட் என வக்கீல்கள் அழைப்பதை தடை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
ஷிவ்சாகர் திவாரி என்ற 75 வயது வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, ஐகோர்ட் மற்றும் மாநிலங்களில் உள்ள பல்வேறு ஐகோர்ட் பெஞ்ச்களில் நீதிபதியை, மைலார்ட், யுவர் லார்ட்ஷிப் என வக்கீல்கள் அழைக்கின்றனர். பிரிட்டீசாரின் ஆட்சியில் உள்ள நடைமுறையை இன்னும் இந்தியாவில் பின்பற்றுவது சட்டவிரோதம் எனவும், இந்த வார்த்தையை நீக்கிட வேண்டும் என கடந்த 2006-ம் ஆண்டு இந்திய வக்கறிஞர்கள் சங்கம் (பார் கவுன்சில் இந்தியா )தீர்மானம் நிறைவேற்றியது. இதனை சுப்ரீம் கோர்ட் கண்டு கொள்ளாமல் உள்ளது, இதனை உடனே பரிசீலிக்க வேண்டும் என கூறினார். வழக்கினை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி 'மைலார்ட்' என அழைக்க வேண்டும் என நாட்டில் உள்ள எந்த கோர்ட்டும் வக்கீல்களை வற்புறுத்தவில்லை. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி செய்தனர்.
Click Here

No comments:

Post a Comment