ஊதிய நிர்ணயம்: முதல்வரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு.
மத்திய அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க கோரி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) நடைபெற்றது.
இதில், மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 7 சங்கங்களின் பொதுச்செயலாளர்களும் நவம்பர் 13-ம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து மனு வழங்குவது, மேலும், நிதியமைச்சர், பள்ளிக் கல்வி அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் ஆகியோரிடமும் மனு வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment