தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு


தமிழகத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி, அக்டோபர், 31ம் தேதியுடன் முடிகிறது. இதன்பின், ஆதார் எண் வேண்டுவோர், நவம்பர் முதல் துவங்கப்படும், நிரந்தர ஆதார் அட்டை வழங்கும் மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
Print E-mail
வெள்ளிக்கிழமை, 30, ஆகஸ்ட் 2013 (17:33 IST)

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் -
புதுக்கோட்டையில் 356 பேர் கைது
 


புதுக்கோட்டை ஆக.30: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர்.


இதனொரு பகுதியாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 139 பெண்கள் உட்பட 356 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சி.பாலச்சந்தர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ச.அலெச்சாண்டர், செயலாளர் க.கருப்பையா மற்றும் நிர்வாகிகள் கோ.திருப்பதி, எம்.செபஸ்டியான், என்.ராஜேந்திரன், ந.ரவிச்சந்திரன், எம்.வெங்கடசுப்பிரமணியன், வெ.ராமன், க.முத்துச் சாமி, எம்.மகேஸ்வரி, வே.கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன், பொருளாளர் எம்.ஜோஷி, சுகாதாரப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் கே.நாகராஜன் ஆகியோர் பேசினார். சங்கத்தின் வட்டார நிர்வாகிகள் பேச்சியம்மாள், சங்கர், லதா, ஆரோக்கியசாமி, கண்ணையா, தேவேந்திரன், சேகர், தேவராஜ், மாப்பிள்ளைத்துரை, வின்சென்ட், ஜீவன்ராஜ், நடனம், ஆரோக் கியஅருள் ஜேசுராஜ் மற்றும் 139 பெண்கள் உட்பட 356 பேர் கைதானார்கள்.

தொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத்தை முன்னிட்டு அன்று அனைத்து பள்ளிகளும் இயங்குவதையும், பள்ளி காலை 09.00 மணிக்கு திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மாற்றுப்பணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை மாற்றுப்பணியில் நியமிப்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.


IGNOU- Hall Ticket for B.Ed., Entrance Exam 2013

அனைவருக்கும் கல்வி இயக்கம் - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு.

தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் வதந்தியை நம்பவேண்டாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

  மறுபதிவு 

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு. AGAE - PAY FIXATION UNDER RULE 4(3) - ELEMENTARY HM HAS BEEN BENEFITED THAN MIDDLE SCHOOL HM - ELE HM SELECTION GRADE HAS BEEN FIXED FOR MIDDLE HM AS PER 4(3) RULE REG - ORDER.


   
Aug.28.8.13


இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்.

பெண்கள் இடம் பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.
REPORT
OF THE
ONE MAN COMMISSION
RAJEEV RANJAN, I.A.S.,
PRINCIPAL SECRETARY TO GOVT,
INDUSTRIES DEPARTMENT.
[Commission to examine the pay anomalies, if any,
arising out of the Government Orders based on the
recommendations of the Official Committee, 2009]

MARCH 2010


SCHOOL AND ELEMENTARY EDUCATION
Various Teachers associations have represented before the One Man
Commission seeking revision of scales of pay on par with their counterpart
working in Kendriya Vidyalaya Schools as shown below:
Sl.
No       Name of the
post
Prerevised
scale of
pay
(Rs.)

Existing
revised scale
of pay
(Rs.)
Upgradation
sought for with
pre- revised
scale of pay
(Rs.)
Revision of scale
of pay sought for
in the revised
scales
(Rs.)
(1) (2) (3) (4) (5) (6)
1. Secondary
Grade
Teacher
4500—
7000
5200-20200
+2800
6500—10500 9300—34800 +
4200
2. B.T.Assistant
including
Tamil Pandit
5500—
9000
9300-34800
+4400
7450—11500 9300—34800 +
4600
3. P.G.Assistant 6500—
10500
9300-34800
+4600
7500—12000 9300—34800 +
4800
4. Head Master,
Primary
School
5300—
8300
9300-34800
+4300
5900—9900 9300—34800 +
4500
5. Head Master,
Middle School
5300—
8300
9300-34800
+4300
5900—9900 9300—34800 +
4500
6. Head Master,
High School
6500—
10500
9300-34800
+4600
8000—13500 15600—39100 +
5400
7. Head Master,
Higher
Secondary
School
8000—
13500
15600-39100
+5400
12000—16500 15600—39100
+7600
SECONDARY GRADE TEACHER INCLUDING PHYSICAL
EDUCATION TEACHER AND EQUIVALENT CATEGORIES
The existing scale of pay of Secondary Grade Teacher is
Rs.5200—20200 + Grade Pay of Rs.2800. The revision of scale of pay
sought for by the associations is Rs.9300—34800 + Grade Pay of Rs.4200.

(55page no)
The Commission observed that based on the recommendations of the Fourth
80   வயதை   கடந்த  ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன்.


புதுடில்லி : நாடு முழுவதிலும் உள்ள 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. 
வேலூர் பகுதி உயர்நிலை பள்ளிகளில் தனி ஊதியம் சார்பாக தணிக்கை நடந்ததாக வெளியிடப்பட்ட தகவல்களினால், தற்போது நிலவும் நிலைகளுக்காக, தற்போது இணையவழி கல்வி சேவை (முகநூல் உட்பட ) செய்யும் நண்பர்களுக்கு பணிவான அன்பு வேண்டுகோள்.

வேலூர் பகுதி பள்ளிகளில் தனி ஊதியம் சார்பாக தணிக்கை நடந்ததாக    சில பக்கங்களை நாம் வெளியிட்டோம். அதனை தொடர்ந்து நாமும் அதற்கு தகுதியான விளக்கங்களை வெளியிட்டோம்.  இருப்பினும் நாம் அனைவரும் வெளியிட்ட விளக்கங்களை விட தற்போது தணிக்கை    தகவல்களே மேலோங்கி உள்ளது.

நாம் வெளியிட்ட தணிக்கை தாள்களில்    தணிக்கையாளர்  கையெழுத்தும் இல்லை, தலைமையாசிரியர் கையெழுத்தும் இல்லை. சில பக்கங்கள் கையாலும், சில பக்கங்கள் டைப் செய்தும் இருந்தது. இதனையே நாமும் வெளியிட்டு, விளக்கமும் அளித்துவிட்டோம். இருப்பினும் தற்போது மேலோங்கி நிற்கும் தணிக்கை குறித்த நிலைக்கு ஒரு முறையான தீர்வை ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. 

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட முறையான தணிக்கை அறிக்கையை பெற்று அதனை வெளியிட்டால் அதனை வைத்து அதற்குரிய தணிக்கையாளர் அல்லது துறை அதிகாரி அவர்களிடம் முறையான மனுவினை முன்வைத்து அரசாணைப்படியான உண்மை நிலையை விளக்கி  அரசாணைப்படியாக பெற்றுவரும்    பயனை  தணிக்கை போன்ற நிலைகள் ஏற்படாமல் தொடர்ந்து பெற  இயலும். 

இவ்வாறான ஒரு முறையான தீர்வை ஏற்படுத்துவது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதை  தவிர்க்க உதவும். இல்லையெனில் இவ்விதமான சிக்கல்களுக்கு நாமே காரணமாக வாய்ப்பு அதிகம்.   

முறையான தணிக்கை அறிக்கையை பெற முயற்சி செய்யுங்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் அதனை வழங்கிட முன்வாருங்கள். நன்றி.  









தமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் /பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் -தெளிவுரை

Tamil Nadu Teachers Eligibility Test - 2013 - Tentative Answer Key Paper I and Paper II Released.


டிப்ளமோ கல்வி தகுதிக்கு 9300+4200 R.T.I தகவல்.
ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ???? என புரியவில்லை.

                    


 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி பாவனா உட்பட கைவண்ணம்.


அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையாணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதால்  ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே ஆகஸ்ட் 2013 சம்பளத்தில்   அனுமதித்து சம்பளம் வழங்க அரசு உத்தரவு.


மதிய உணவுக்கு நிர்ணயித்த தொகை சாத்தியமற்றது: நாடாளுமன்றக் குழு.


ஒரு பாட்டில் தண்ணீர் விலையே 10 ரூபாய் என்றிருக்கும் நிலையில், மதிய உணவு ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள 3.11 முதல் 4.65 ரூபாய் என்ற தொகை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.

2030ம் ஆண்டுக்குள் 50% பேருக்கு மனநலம் 

பாதிக்கும்: உலக சுகாதார அமைப்பு.

ராமநாதபுரம்: "வரும் 2030 ம் ஆண்டுக்குள், உலகில் 50 சதவீதம் பேருக்கு மனநலம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது" என உலக சுகாதார மைய ஆய்வில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம், மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மனநலம் குறித்து பள்ளிகளில் சரிவர கற்றுத்தராததால், எளிதில் கோபப்படுவது; ஏமாற்றத்தால் தவறான முடிவுகளை எடுப்பது; சகிப்புத்தன்மை இல்லாமை போன்றவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காற்றில் பறக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம்: 3055க்கு 762 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை.


கோவை:தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (ஆர்.டி.இ.,) சுத்தமாக மதிக்கப்படவில்லை என்பது, தகவல் உரிமைச் சட்டத்தால் அம்பலமாகியுள்ளது.பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை, 2009ல் மத்திய அரசு அமல்படுத்தியது.

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு.

மறுபதிப்பு: நவம்பர் 2012 இல் வெளியிட்ட கீழ்காணும் பதிவினை மறுபடியும் உங்களுக்காக வெளியிடுகிறோம்.


D.T.Ed., பட்டய படிப்பு +2 கல்வித் தகுதிக்கு இணையானது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

D.TEd பட்டய படிப்பு பனிரெண்டாம் வகுப்புக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.
இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியான D.TEd பட்டய படிப்பானது +2 படிப்புக்கு இணையாகவே கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஆசிரியர் பதவிக்கு 10ம் வகுப்பு + D.TEd + பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே முறையான ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2–க்கு சமமாக கருதலாம் ஐகோர்ட்டு உத்தரவு.

ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர்
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளினை உங்களுக்காக வெளியிடுகிறோம்.

நன்றி : www.aeeoassociation.blogspot.com

இனிய வணக்கம்
               AEEO நண்பர்களே...!! கல்வி சார் வலைபூ  நண்பர்களே...!! கல்வி சார் முகநூல் நண்பர்களே..!! மீண்டும் வணக்கங்கள்
                    
                     ஒரு வேண்டுகோள்

1.பள்ளிகளை பார்வை செய்யும்போது எந்த மாதிரியாக பார்வையிட வேண்டும் என்ன பதிவேடுகளை பார்க்கலாம் கற்றல் கற்பித்தல் சார்பாக வகுப்பறை பார்வை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

2.பள்ளி ஆண்டாய்வு செய்யும்போது எந்த மாதரியாக ஆண்டாய்வு செய்ய வேண்டும் என்ன என்ன பதிவேடுகள் பார்வையிட வேண்டும் ஆண்டாய்வுபடிவம்  மாதிரி , AEEO பூர்த்தி செய்து DEEO விடம் சமர்ப்பிக்க எதுவாக படிவம், முதலிய வற்றையும் உங்கள் கருத்துக்களையும் முன்னால்இயக்குனர்கள் வழிகாட்டுதல் அரசு ஆணைகள் முதலியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்
          
இன்று தமிழகமெங்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்காக COMMUNICATIVE ENGLISH பயிற்சி நடைபெற்றது. எனவே இன்று மீண்டும் நம் ஆசிரியர்களுக்காக TRAINING MODULE FOR FIRST STANDARD ENGLISH TEACHERS என்ற பெயரில் நாம் முன்னரே வெளியிட்ட பதிவினை மீண்டும் உங்களுக்காக வெளியிடுகிறோம்.
TRAINING MODULE FOR FIRST STANDARD ENGLISH MEDIUM TEACHERS.

             

கடித எண். 8764 நாள்: 18.4.2012  ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.

கடித எண்.8764 நாள் : 18.4.2012  பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.

இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர்  தேர்வுநிலை/  சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.

        (பார்வை 2 இல் அரசாணை  270 நாள்.26.8.2010. உள்ளது.)

இதன் படி சிறப்புபடி GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்ததால் இதனை பெற்றவர்கள் குறித்து நமது முந்தைய பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம். 1.8.2010 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அரசாணைப்படியான சிறப்புப்படியை டிசம்பர் 2010 வரை அனைத்துநிலை இடைநிலை ஆசிரியர்களும் பெற்றிருப்பர்.

  பின்னர் அரசாணை  23 நாள் 12.1.2011 இன் படி(பத்தி 4)   " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்று உள்ளது. 

        இவ்வாறு சிறப்புபடியினை தொடர்ந்துபெற அனுமதிக்கப்பட்டவர்கள், 1.1.2006 -க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களே.

        இதனையே கடித எண் .8764 நாள்.18.4.2012 இல்  " பார்வை இரண்டில் (அரசாணை  270) கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் (GRANTED TO SECONDARY GRADE TEACHERS)  மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு,      01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர்   தேர்வுநிலை/  சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.

தணிக்கையில்

தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பது  

சார்ந்து நமது விளக்கம்:

தணிக்கை தாளில் ஒரு பக்கத்தில் கீழ்காணும் வரிகள் உள்ளது:

"கீழ்வரும் ஆசிரியர்கள் அரசாணை  எண். 270 நாள்.26.8.2010-ன்படி 1.8.2010 முதல் சிறப்புப்படியாக ரூ.500/- பெற்று வருகின்றனர். அரசு கடித எண். 8764/நாள் 18.4.2012  பத்தி 2 (இ ) இல் 1.1.2006 -க்கு முன்னர் தேர்வுநிலை/சிறப்புநிலை பற்றவர்களுக்கு மட்டுமே இச்சிறப்புப்படி அனுமதிக்கப்படவேண்டும் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் சிறப்புப்படி பெற தகுதியில்லை. 1.8.2010 முதல்  சிறப்புப்படி தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும்."என்று உள்ளது.

 இது தவறான புரிந்துகொள்ளுதலினால் எழுதப்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம். 
                  
இங்கு நமது விளக்கம்:

இந்த தணிக்கைத் தாள்களில் பெரும்பாலும் 2009, 2010, 2011 ஆம் ஆண்டுகளில் தேர்வுநிலை முடித்தவர்களுக்கு தனிக்கைதடை என்று கூறியுள்ளதாக அறிகிறோம். 

 கடித  எண். 8764 ஐ,    இதற்கு  முன்னர் வெளியிடப்பட்ட G.O.270.Dt.26.8.10 மற்றும்  G.O.23 Dt.12.1.11 இல் கூறப்பட்டுள்ளவைகளை  பார்க்காமல் நடைமுறைபடுத்தியதால் தான் தணிக்கைதடை  என்று கூறுகின்றனர்.

மிகவும் சுருக்கமான விளக்கம்:

அரசாணை  270 நாள்: 26.8.10 இன் மூலம் அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1.8.2010 முதல் தனி ஊதியம் அனுமதிக்கப்பட்டது.

அரசாணை  23 நாள்:12.1.11 இன் மூலம் தேர்வு/சிறப்பு நிலை பெற்று 9300-34800 + 4300 மற்றும் 4500 தர ஊதியம் பெறுபவர்களுக்கு சிறப்பு படி தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு சிறப்புபடிக்குப் பதிலாக தனி ஊதியம் வழங்கப்பட்டது.  இதனையே கடிதம் 8764 இல் 1.1.2006 -க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே இச்சிறப்புப்படி அனுமதிக்கப்படவேண்டும் என  தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் அரசாணை  23 இல் சிறப்புபடியை தொடர்ந்துபெற அனுமதிக்கப்பட்டவர்கள்.

============================================================

அன்பு வேண்டுகோளும்   எங்களின்  ஆதரவும்:

அரசாணைகளை நன்றாக படியுங்கள். எங்களுக்கு தெரிந்தவரை விளக்கமளித்துள்ளதாக நம்புகிறோம். மீண்டும் மீண்டும் பொறுமையாக படியுங்கள். நம் ஆசிரியர் சமுதாய நண்பர்களுக்காக அதிக நேரம் செலவு செய்து பதிவு செய்துள்ளோம். 

அரசாணைகள் தெளிவாக உள்ளது. தைரியமுடன் இருங்கள். அரசாணைகளில் உள்ளவைகளை அறிந்து கொண்டால் எந்த தடை வந்தாலும் அரசாணைகளை வைத்து விளக்கி நாம் பெற்ற பயன்களை தொடர்ந்து பெறலாம்.

             





     

தற்போது 1.1.2011 -க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின்   17.5.2011 நாளிட்ட   கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம். 




தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும்  P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின் படி பார்ப்போம்.

SPECIAL ALLOWANCE  பற்றிய   விளக்கம் :

          இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010. 

    இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர். 

பின்னர் 12.01.2011 இல் அரசாணை  23 இன் படி தனி ஊதியம்.

   இதில் பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     மேலும் பத்தி 4 - இன் இறுதியில் " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்றும் உள்ளது. 

 சிறுவிளக்கம் உங்களுக்காக:

     இதில் குறிப்பிடப்பட்டுள்ள "சாதாரண நிலையில்" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

      அதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800 இல் ஊதிய  நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750 பெற இயலாது என்பதாகவும், ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.

இங்கு கொஞ்சம்  பொறுமையாக படியுங்கள்.

  S.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால் 

1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண     நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )

2.  1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று  5200 - 20200 + தனி ஊதியம் 2800                 பெற்றுகொண்டிருப்போர்.

3.   இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300 நிலையினர்.

4.   இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500 நிலையினர்            
(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )
  
இதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண்  3 மற்றும் 4 இல் உள்ளவர்கள்  அரசாணை  23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள  " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.

இவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால், இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை? 

   அவர்களுக்கு  "தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:

 பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு  தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர். 

    இவர்களை தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்,சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவா? அப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும்  தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.

  இதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள். 

கூடுதல் பதிவுகள் தொடரும். 





  

.
          

GENERAL ELECTION LOKSABHA - 2013 ANNEXURE - I FORMS-----வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு.



TAMILNADU ALL TEACHER ASSOCIATION (T.A.T.A.) GENERAL SECRETARY HAD SENT A REQUISITION LETTER TO THE DIRECTOR OF SCHOOL EDUCATION REGARDING THE SCHOOL STUDENTS. NOW REPLY HAS BEEN RECEIVED.  WE PUBLISHED THIS FOR YOUR REFERENCE.