தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்க்க மனு அனுப்புங்க.

சட்டசபை மனுக்கள் குழு அழைப்பு.

திருச்சி .ஆகஸ்ட்.11. நாளிதழ் செய்தி.

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சனைகள் குறித்து சட்டசபை மனுக்கள் குழுவுக்கு மனு அனுப்பலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன்  அறிக்கை: தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு விரைவில் திருச்சியில் கூடுகிறது. திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்படவேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்த மனுக்களை அனுப்பலாம்.


மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர்,மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை, சென்னை - 600 009. என்ற முகவரிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பலாம். 5 நகல்கள் அனுப்பப்பட வேண்டும். மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கபடாமல் இருக்கும் பொதுப்பிரச்சனைகள் குறித்ததாக இருக்கலாம்.எந்தவொரு மனுவும் ஒரேயொரு  பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு    துறை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.சட்டசபை  வரம்பிற்கு உட்பட்ட மனுக்கள், மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பின்னர் தகவல் அனுப்பப்படும்.No comments:

Post a Comment