சிறந்த நூல்களுக்கு பரிசு : விண்ணப்பிக்க கால நீட்டிப்பு.

தமிழக அரசு சார்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களுக்கான பரிசுப் போட்டி 33 வகைப்பாடுகளில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தேர்வு செய்து நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்நூலை பதிப்பித்த பதிப்பகத்துக்கு ரூ.10,000மும் பரிசாக வழங்கப்படும்.
போட்டிக்கு விண்ணப்பங்களை நிறைவு செய்து அனுப்ப ஜூலை 31ம் தேதியே கடைசி நாளாக இருந்தது. ஆனால், தற்போது அது ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment