கல்வி துறையில் 12 இணை

 

இயக்குனர்கள்  மாற்றம்.

Aug.14.


சென்னை: பள்ளிக்கல்வித் துறையில், நேற்று, 12 இணை இயக்குனர்கள்,  இட மாற்றம் செய்யப்பட்டனர்.
பள்ளிக்கல்வித் துறையில் உள்ள காலி பணியிடங்கள், கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, இயக்குனர்கள் மாற்றம் மற்றும் இயக்குனர்கள் பதவி உயர்வு ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் இருந்த, இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம், நேற்று நடந்தது. ஒரு சில அதிகாரிகளைத் தவிர, மற்ற அனைவரும்,  வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
பள்ளிக்கல்வித் துறையில், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக கருப்பசாமி, மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக பாலமுருகன், இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக பழனிச்சாமி நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குனரான தர்ம.ராஜேந்திரன், பள்ளிக்கல்வித் துறையில், தொழிற்கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, சேதுராம வர்மா, தேர்வுத் துறை, மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக, ராஜ ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளனர். மெட்ரிக் பள்ளி இணை இயக்குனராக இருந்து வந்த கார்மேகம், டி.ஆர்.பி., உறுப்பினராக, மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட, 12 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பணியாற்றி வந்த, ஐந்து பேர், இணை இயக்குனர்களாக, நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வி துணை இயக்குனர் சுதர்சன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனராகவும் (நிர்வாகம்), திருவள்ளூர் மாவட்ட கூடுதல் சி.இ.ஓ., சுகன்யா, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட சி.இ.ஓ., நாகராஜ முருகன், அனைவருக்கும் கல்வி இயக்ககத்திலும், ஈரோடு மாவட்ட சி.இ.ஓ., ஸ்ரீதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment