மக்கள் தொகை பதிவேடுபெயர் பதிவு முகாம்இன்று துவக்கம்.

சேலம்: சேலம் மாநகராட்சியில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் பதிவு செய்வதற்கான முகாம், இன்று (டிச., 15) துவங்குகிறது.சேலம் மாநகராட்சி கமிஷனர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், பெயர் பதிவு செய்வதற்கான முகாம், இன்று (டிச.,15) துவங்குகிறது.


 முதல் கட்டமாக, சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில், ஒன்றாவது வார்டில், பெரிய மோட்டூர், காமிநாயக்கன்பட்டி, ரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில், இன்று முதல், டிசம்பர், 28 ம் தேதி வரை, முகாம் நடக்கிறது.பெயர் பதிவு செய்யும் பணிக்காக, நியமனம் செய்யப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் மூலம், ஒவ்வொரு வீட்டிலும், படிவம் வழங்கப்படுகிறது. இந்த படிவத்தில், உரிய விவரங்களை பூர்த்தி செய்து, மேற்கண்ட நாட்களில் நடைபெற இருக்கும் முகாமில், படிவத்தில் பூர்த்தி செய்யும் நபர்கள், நேரில் வந்து, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment